ஆதித்யநாத் தகவல்
லக்னோ, மார்ச் 1- தெருவில் திரியும் கால்நடை களுக்கு கவ்சாலா அமைத்துக் கொடுப்பதும், தெருக்களில் கால்நடை கள் சுற்றித் திரியாத மாநிலமாக உ.பி. யை மாற்றுவதுமே தங்களின் லட்சியம் என்று அம்மாநில பாஜக முதல்வர் ஆதித்யநாத் கூறியுள்ளார். ஆதித்யநாத் அரசு கொண்டுவந்த பசுவதைத் தடைச் சட்டங்களால், வயதான- பராமரிக்க முடியாத மாடு களை, விற்க முடியாமல், விவசாயி கள் அவற்றை தெருக்களில் விரட்டி விடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு சுமார் 16 லட்சம் மாடுகள் தெருக்களில் சுற்றித் திரிந்த நிலையில், 8 லட்சம் மாடுகளுக்கு மட்டும் பாஜக அரசால் கோசாலைகள் அமைக்க முடிந்தது. மீதியுள்ள 8 லட்சம் மாடுகள் இப்போதும் சுற்றித் திரிகின்றன. இந்த மாடுகள் விளைநிலங்களில் புகுந்து விவசாயிகளின் சாகுபடியை அழிப்பது முக்கியப் பிரச்சனையாக மாறியுள்ளது. தெருக்களில் மாடு முட்டி உயிரிழப்போரின் எண்ணிக்கை யும் நாளுக்கு நாள் அதிகரித்து வரு கிறது. இது உ.பி. அரசு மீது விவசாயி களுக்கு பெரும் அதிருப்தியை ஏற் படுத்தியுள்ளது. சாகுபடிகளை மேயும் மாடுகளுக்கு எதிராக அவர்கள் போரா ட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
இது உ.பி. தேர்தலில் எதிர்விளைவு களை உருவாக்கி வருகிறது. மார்ச் 10 ஆம் தேதிக்குப் பிறகு தெருக் கால்நடைகளைக் கையாள்வ தற்கான புதிய கொள்கையை உரு வாக்குவதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தாலும் எதிர்ப்பு குறைவ தாக இல்லை. “நடந்து வரும் சட்ட மன்றத் தேர்தல் முடிந்ததும், தெருக் கால்நடைகளின் பிரச்சனைக்கு தீர்வு காண புதிய ஏற்பாடு செய்யப்படும். மக்கள் மாட்டுச் சாணத்தில் இருந்து சம்பாதிக்கும் வகையில் புதிய முறை யை நான் கொண்டு வருவேன்” என்று உன்னாவ் கூட்டத்தில் மோடி பேசியதையும் மக்கள் நம்புவதாக இல்லை. இந்நிலையில்தான், உத்தரப்பிர தேச மாநிலத்தில் உள்ள 75 மாவட் டங்களில் 44 மாவட்டங்கள் தெருக் கால்நடைகள் இல்லாதவை என்ற சான்றிதழ் பெற்றுள்ளதாக முதல்வர் ஆதித்யநாத் கூறியுள்ளார். தெருவில் திரியும் கால்நடை களுக்கு உணவளிக்க சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு ரூ.474 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் 75 மாவட்டங்களுக்கும் கால்நடை பராமரிப்புத் துறையின் அலுவலர்கள் தொடர்ந்து வருகை தந்து கோசாலைகளைக் கண்கா ணித்து வருவதாகவும், தெருக்களில் கால்நடைகள் சுற்றித் திரியும் பகு திகளை கணக்கெடுத்து வருவதாக வும் அவர் குறிப்பிட்டுள்ளார்.