பெங்களூரு, ஏப்.11- கர்நாடகத்தில், ஹிஜாப் அணிய விட மாட்டோம், ஹலால் இறைச்சி விற்பனையை தடுத்து நிறுத்துவோம் என்று பஜ்ரங் தள் உள்ளிட்ட சங்-பரி வாரங்கள், இஸ்லாமியர்க்கு எதிராக வெறுப்பை தூண்டி வருகின்றனர். தற்போது, முஸ்லிம் வியாபாரி களிடம் பழங்கள், காய்கறிகள் வாங்க வேண்டாம் எனவும், முஸ்லிம்களின் வாகனங்களில் பயணிப்பதை தடுக்க வேண்டும் எனவும் அடுத்த கட்ட வெறுப்பு அரசியலை கையில் எடுத்துள்ளனர். அந்த வகையில், தார்வார் மாவட்டத்தில், கோவில் அருகே பழ வியாபாரம் செய்த முஸ்லிம்களின் கடைகளை, ஸ்ரீராம் சேனா அமைப்பினர், அடித்து- நொறுக்கிச் சூறையாடியுள்ளனர். தார்வார் மாவட்டம் நுக்கேரி பகுதியில் அனுமன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே ஏழைகள் கடைகள் நடத்தி வரு கின்றனர்.
இவர்கள் பூஜைப் பொருட் கள், பழங்கள் விற்பனை செய்து வரு கிறார்கள். இந்நிலையில், சனிக்கிழமை யன்று திடீரென நுங்கேரி அனுமன் கோயில் பகுதிக்குச் சென்ற ஸ்ரீராம் சேனா கும்பல், அங்குள்ள முஸ்லிம் களின் பழக் கடைகளை சூறையாடி யுள்ளனர். குறிப்பாக நபிசான் என்ப வரின் கடையிலிருந்து தர்ப்பூசணி பழங்களை தூக்கி வீசி உடைத்தது, வீடியோவாக சமூகவலைதளங்க ளில் வெளியாகியுள்ளது. அதில், பாதிக்கப்பட்ட வியாபாரி நபிசான் பேட்டி ஒன்றை அளித்துள் ளார். அதில், “அவர்கள் (ஸ்ரீராம் சேனா வினர்) 8 முதல் 10 பேர் கூட்டாக வந்த நிலையில், நான் மட்டும் இருந்தேன். திடீரென்று வந்து என்னை அறைந் தார்கள். இங்கே கடை வைக்கக் கூடாது என்று தெரியாதா என்று கேட்டார்கள். அது எனக்குத் தெரி யாது என்றேன். ஆனால், என் தர்ப்பூசணிகளை மூட்டை கட்டுவ தற்குக் கூட நேரம் கொடுக்காமல், எல்லா தர்ப்பூசணிகளையும் எடுத்து கீழே வீசினார்கள். மொத்தம் 6 குவிண்டால் தர்ப்பூசணி வாங்கி வைத்திருந்தேன்.
இதில் 1 குவிண் டால் மட்டுமே விற்பனையாகி இருந் தது. மீதமிருந்த அனைத்தையும் அழித்துவிட்டனர். இதனால், எனக்கு 8,000 ரூபாய்க்கு மேல் நஷ்டம். இந்த கோவில் அருகே நான் கடந்த 15 ஆண்டுகளாக கடை நடத்தி வருகிறேன். யாரும் எதிர்ப்பு தெரி வித்தது இல்லை. எனக்கு வாழ்வா தாரம் அளித்த பழங்கள் சாலையில் உடைத்து வீசப்பட்டதை நினைத்து இப்போதும் அழுது கொண்டிருக்கி றேன். இதற்குப் பதில் என்னையே அவர்கள் கொன்று போட்டிருக்க லாம்” என்று அழுது புலம்பியுள்ளார்.