நவம்பர் 5 -பீகார் சட்டமன்றத் தேர்தல்? 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டமன்றத்தின் பத விக்காலம் வரும் நவம்பர் 22ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. அதற்கு முன்பாக தேர்தலை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயம் தேர்தல் ஆணையத்துக்கு இருப்பதால், நவம்பர் 5ஆம் தேதி பீகார் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் மூலம் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தல் அக்டோபர் 28 முதல் நவம்பர் 7 வரை 3 கட்டங்களாக நடைபெற்றது. அக்டோபர் 28ஆம் தேதி 71 தொகுதிகளுக்கும், நவம்பர் 3ஆம் தேதி 94 தொகுதிகளுக்கும், நவம்பர் 7ஆம் தேதி 78 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. தொடர்ந்து தேர்தல் முடிவுகள் நவம்பர் 10ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. இதே போல், இம்முறையும் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. பீகாரின் முக்கியமான பண்டிகையான “சாத் பூஜை” அக்டோபர் 28ஆம் தேதி வருகிறது. எனவே, அந்த பண்டி கைக்குப் பிறகு தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. பீகாரில் தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணை யர் ஞானேஷ் குமார் அடுத்த வாரம் அம்மாநிலத்துக்குச் செல்ல உள்ளார். அதன்பின்னர் பீகார் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் செய்தி வெளி யிட்டுள்ளன.