புதுதில்லி,பிப்.1- இஸ்ரேல் நாட்டின் என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் வேவு மென்பொருள் மூலம், இந்தியாவில் பத்திரிக்கையாளர்கள், அமைச்சர் கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டது குறித்து சர்வ தேச, தேசிய நாளிதழ்களில் செய்தி கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவ காரத்தை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு சிறப்பு நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்று பல்வேறு மனுக்கள் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட சிறப்பு நிபுணர் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. ஆனால், கடந்த 2021 ஜூலை 22ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பெகாசஸ் வேவு பார்க்கும் மென்பொருள் மூலம் போன் ஒட்டு கேட்பு புகாருக்கு ஆதாரம் இல்லை என்று தெரிவித்திருந்தார்.
ஆனால், இஸ்ரேலுடன் 2017ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட 200 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான ராணுவ ஒப்பந்தத்தின் ஒரு பகுதி யாக பெகாசஸை வாங்கியது இந்திய அரசுதான் என்று அமெரிக்க நாளே டான நியூயார்க் டைம்ஸ் தெரிவித்தது. இந்தச்சூழலில் ஜனவரி 31 அன்று பட்ஜெட் தாக்கல் கூட்டத்தொ டர் தொடங்கிய நிலையில், அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள், ‘நாடா ளுமன்றத்துக்கு தவறான தகவலைத் தெரிவித்ததாக’ உரிமை மீறல் நோட்டீஸ் அளித்திருக்கின்றனர். காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்திருக்கின்றனர். இதுகுறித்து இந்தி கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. பினோய் விஸ்வம் கூறுகையில்“அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அரசின் உண்மை முகத்தையும், பெகாசஸ் பற்றிய உண்மைகளையும் மறைக்க முயன்று ள்ளார். அமைச்சர்கள் நாடாளுமன்றத் தில் உண்மையான தகவலைக் கொடுக்க வேண்டும்” என்று தெரி வித்தார். நாடாளுமன்றத்தைத் தவ றாக வழிநடத்திய அமைச்சர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தி யுள்ளனர்.