states

ஊட்டச்சத்து குறைபாடு : குஜராத் முதலிடம்!

புதுதில்லி, ஆக. 18 - இந்தியாவில், ஊட்டச்சத்து  குறைபாட்டால் பாதிக்கப்பட்ட வர்கள் அதிகம் இருக்கும் மாநி லங்களில் பாஜக ஆளும் குஜராத் மாநிலம் முதலிடத்தில் இருப்பது, ‘நிதி ஆயோக்’ அறிக்கை மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குஜராத் மாநில மக்கள் தொகை யில், 38.09 சதவிகிதம் பேர் ஊட்டச் சத்து குறைபாட்டால் பாதிப்பு அடை ந்துள்ளதாக கூறியிருக்கும் ‘நிதி ஆயோக்’ அறிக்கை, மறுபுறத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  தலைமையிலான இடது ஜனநா யக முன்னணி (LDF) ஆட்சி நடக்கும் கேரளத்தில், ஊட்டச்சத்து குறை பாடு வெறும் 0.55 சதவிகிதம்தான் என்ற புள்ளிவிவரத்தையும் வெளி யிட்டுள்ளது. ‘நிதி ஆயோக்’ அமைப்பானது, கடந்த ஜூலை மாதம் தனது தேசிய பல பரிமாண வறுமைக் குறியீடு (MPI) ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில்தான் இந்த விவரங்களை வெளியிட்டுள் ளது. அதில், ‘குஜராத் மாடல் ஆட்சி’ என்று பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களால் ஊதிப் பெரி தாகக் காட்டப்பட்ட குஜராத் மாநி லத்தில் 38.09 சதவிகிதம் மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

குஜராத்தின் கிராமப்புற மக்கள் தொகையில் கிட்டத்தட்ட சரிபாதி பேர்- அதாவது, 44.45 சதவிகி தம் பேர் ஊட்டச்சத்து இல்லாமல் உள்ளனர். நகர்ப்புறங்களை எடுத்துக் கொண்டாலும் 28.97 சத விகிதம் பேர் ஊட்டச்சத்து குறை பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் பின்தங்கியவை. ஆனால், ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனையில், இந்த பின்தங்கிய மாநிலங்களைக் காட்டிலும் குஜராத் பின்தங்கியுள்ளது. 

தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (National Family Health Survey - NFHS 5) தரவுகளின்படி, வளர்ச்சி குன்றிய குழந்தைகளைக் கொண்ட மாநிலங்களின் வரிசையில் குஜராத் நான்காவது இடத்தில் உள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள குழந்தைகளில் 39 சதவிகிதம் பேர்  தங்கள் வயதுக்கு ஏற்ற எடை யில்லாமல் குறைந்த எடையுடன் உள்ளனர். இவ்வாறு எடை குறைந்த குழந்தைகள் பட்டியலில் 39.7 சதவிகிதம் என்ற சராசரியுடன் குஜராத் மாநிலம்  இரண்டாவது இடத்தில் உள்ளது. இது சுகாதார அளவீடுகளின் அடிப்படையில் குஜராத் மாநிலத்தின் மோசமான நிலையைக் காட்டுவதாக அமைந்துள்ளது. அதேநேரம், ஊட்டச்சத்து விஷயத்தில் பாஜக ஆளாத மாநி லங்கள் சிறப்பான இடத்தில் உள் ளன. கர்நாடகாவில் 7.58 சதவிகிதம் பேர் மட்டுமே ஊட்டச்சத்து குறை பாட்டால் பாதிக்கப்பட்டு உள்ள னர். பஞ்சாப்பில் 4.7 சதவிகிதம் பேர் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்ச னையை  எதிர்கொள்கின்றனர். இதுவே தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் 2.20 சதவிகிதம் பேருக்கு மட்டுமே ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது. கேரள மாநி லத்தில் 1 சதவிகிதம் பேருக்கு கூட ஊட்டச்சத்து குறைபாடு இல்லை. வெறும் 0.55 சதவிகிதம் பேருக்கு மட்டுமே ஊட்டச்சத்து குறைபாடு பாதிப்பு இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன.