பீகார் மக்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை
பீகாரில் நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர் தலை முன்னிட்டு வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் 65 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். ஆகஸ்ட் 1ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளி யிடப்பட்டது. இதில் ஆட்சேபம் தெரி விக்கவோ, திருத்தம் மேற்கொள்வோ செப்டம்பர் 1ஆம் தேதி வரை கால அவ காசத்தையும் இந்திய தேர்தல் ஆணை யம் தெரிவித்து இருந்தது. இதனிடையே வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடர் பாக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங் கிய உச்சநீதிமன்றம் வாக்காளர் பட்டிய லில் பெயரை சேர்க்க ஆதார் அட்டை உள்ளிட்ட பட்டியலிடப்பட்ட 11 ஆவ ணங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தது. இந்நிலையில், பீகாரில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிக்குப் பிறகு அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்க தேர்தல் ஆணையம் திட்ட மிட்டுள்ளதாக அதிகாரிகள் மூலம் செய்தி கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் புதிய அட்டைகள் எப்போது வழங்கப் படும் என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் கூடுதல் தக வல் வெளியாகியுள்ளது.