வாக்குத் திருட்டு குறித்து புதிய வீடியோ
புதுதில்லி பாஜகவுடன் இணைந்து தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தரவுகளை வெளி யிட்டு அம்பலப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து பாஜக அமைச்சர் சுரேஷ் கோபி வென்ற கேரளாவின் திருச்சூர் தொ குதி, அசாம் என பல மாநிலங்களில் பாஜகவும் தேர்தல் ஆணையமும் இணைந்து நடத்திய வாக்குத் திருட்டு தொடர்பான பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளி யிட்டுள்ளார். லாபடா லேடீஸ் (காணாமல் போன பெண்கள்) என்ற பிரபலமான இந்தி படத்தில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் காட்சி யை, தேர்தல் ஆணையத்தின் மீதான புகாருக்கு ஏற்றவாறு மாற்றி உருவாக்கப்பட்டுள்ள அக்காணொலியை அவர் வெளியிட்டுள்ளார். அத்திரைப்படத்தில் காணாமல் போன தனது மனைவியைக் கண்டுபிடித்து தரக் கோரி கணவர் புகார் கொடுக்க வருவார். அந்த காட்சியை சற்று மாற்றி காட்சியில் வரும் நபர் திருட்டுப் புகார் கொடுக்க வந்திருப்பதாகக் கூறு கிறார். அதைக் கேட்ட காவலர்கள் வழக்க மாக மக்கள் திருட்டுப் புகார் கொடுக்கும் பொ ருள்களின் பெயர்களை பட்டியலிடுகிறார். ஆனால், அதெல்லாம் இல்லை, எனது வாக்குத் திருட்டுப் போனதாக அந்த நபர் கூறுவது போல வசனம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களின் உரிமை பயணம் வாக்குத் திருட்டுக்கு எதிராக பீகார் மாநி லத்திலிருந்து வாக்காளர்களின் உரிமைப் பய ணத்தை ஆகஸ்ட் 17 முதல் துவங்க உள்ளதாக ராகுல் காந்தி அறிவித்துள்ளார். மேலும் வாக்குத் திருட்டிலிருந்து சுதந்திரம் வேண்டும் என்ற இப் பிரச்சாரத்தில் பங்கேற்று, பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு ஆதரவு அளிக்குமாறு காங்கிரஸ் வலியுறுத்தி யிருக்கிறது. இந்த பயணத்தில் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.