கரையை கடந்த ஆறு வெள்ளத்தில் மிதக்கும் ம.பி.,
புயல் கரையை கடந்தது என கேள்விப் பட்டிருப்போம். ஆனால் மத்தியப் பிரதேசத்தில் இதுவரை அறியப் படாத வகையில், கனமழை வெள்ளம் மூலமாக ஆறு கரையை கடந்து, மாநிலத்தின் பெரும்பாலான பகுதியை வெள்ளக்காடாக மாற்றியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பாயும் முக்கிய ஆறுகளில் ஒன்று மந்தாகினி. உத்தரகண்டில் உற்பத்தியாகி, மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசத்தில் பாய்கி றது. மந்தாகினி யமுனா ஆற்றின் துணை ஆறாகும். இந்நிலையில், மத்தியப் பிரதே சத்தில் கனமழை பெய்து வரும் சூழலில் மந்தாகினி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடி வருகிறது. ராம்கட், ஜான்கிகட் பகுதிகளில் கரை உடையா மல், கண்மாய்களில் மறுகால் பாய்வது போல கரையை கடந்து ஊருக்குள் வெள்ள நீர் பாய்ந்து வருகிறது. சாலை களா? ஆறுகளா என அடையாளம் தெரி யாத வகையில் பாய்ந்தோடும் தண்ணீ ரில், படகுகள் மூலம் மக்கள் மீட்கப் பட்டு வருகிறார்கள். துரித மீட்பு பணிக்கு வாய்ப்பு குறைவு பாஜக ஆளும் மத்தியப் பிரதேச அரசு கனமழைக்கு முன்னெச்சரிக்கை அறி விப்பு மற்றும் நடவடிக்கை மேற்கொள் ளாததால் மந்தாகினி ஆறால் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. கனமழை நின்றா லும் உடனடியாக மீட்புப் பணிகள் நடை பெற வாய்ப்பில்லை. காரணம் மந்தா கினி ஆற்றின் கரையோர பகுதிகளில் 6 அடிக்கு மேலாக வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. ஆற்றில் நீரோட்டம் இன்னும் குறையவில்லை. இதனால் மந்தாகினி ஆற்றின் கரையோர பகுதி மக்கள் இயல்புநிலையை இழந்து உணவின்றி தவித்து வருகின்றனர்.