தேசிய நெடுஞ்சாலையை சரிசெய்வதில் மோடி அரசு அலட்சியம்
சமீபத்தில் பெய்த கனமழையால் ஜம்மு-காஷ்மீர் மிக மோசமான அளவில் உருக் குலைந்தது. உயிர்ப் பலி, சொத்துக்கள் சேதம் உள்ளிட்ட நிகழ்வுகளுடன் நிலச்சரிவு, ஆற்றில் வெள்ளநீர் அதிகரிப்பால் சாலை களும் மாயமாகியுள்ளன. குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதே சத்தின் முக்கிய சாலை வழித்தடமான, ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை (என்எச் 44) கடு மையாக சேதமடைந்துள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலை ஜம்மு-காஷ்மீரின் உயிர் நாடி ஆகும். இத்தகைய சூழ்நிலையில், என்எச் 44 நெடுஞ்சாலையை சரிசெய்யாமல் ஒன்றிய சாலைப்போக்குவரத்து அமைச்சக கட்டுப்பாட் டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) காலம் தாழ்த்துவதால் ஆப்பிள் விவசா யிகள் இயல்பு நிலை இழந்து தவித்து வரு கின்றனர். அதாவது விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் ஆயிரக்கணக்கான டன் புதிய ஆப்பிள்கள் மற்றும் பேரிக்காய்களை நாடு முழுவதும் உள்ள பழச்சந்தைகளுக்கு கொண்டு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் காஷ்மீரின் ஆப்பிள் தொழில் ரூ.12,000 கோ டிக்கும் அதிகமான அளவில் பெரும் இழப்பை எதிர்கொண்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலையை விரைவில் சரிசெய்து திறக்கும் என்ற நம்பிக்கையில் தெற்கு காஷ்மீரின் காசி குண்டில் ஆப்பிள்களை ஏற்றிச் செல்லும் லாரி கள் இன்னமும் அணி வகுத்து நிற்கின்றன. குப்பைகளாக கொட்டப்பட்ட ஆப்பிள்கள் பல நாட்களாக கொளுத்தும் வெயிலில் லாரிகள் நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டி ருந்ததால் ஆப்பிள் பழங்கள் அழுகிவிட்டன. இதனால் அதிருப்தி அடைந்த விவசாயிகளும், வர்த்தகர்களும் ஆப்பிளை நெடுஞ்சாலையில் கொட்டி வீடு திரும்பியுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, சுமார் 7 லட்சம் குடும்பங்கள் ஆப்பிள், பேரிக் காய் உள்ளிட்ட விவசாயத்தை நம்பியுள்ளன. நெடுஞ்சாலையை சரிசெய்வதில் மோடி அரசின் அலட்சியத்தால், அன்றாடங் காய்ச்சிகளான 7 லட்சம் குடும்பங்கள் இயல்புநிலை இழந்து தவித்து வருகின்றன. 40 ஆண்டுகளில் இல்லாத நிலைமை காஷ்மீர் பள்ளத்தாக்கு பழ உற்பத்தியா ளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் பஷீர் அகமது கூறுகையில்,”ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மூடப்பட்டதால் காஷ்மீரில் உள்ள பழத்தோட்டங்கள் மற்றும் சந்தைகளில் சுமார் 5,000 லாரிகளில் ஆப்பிள் மற்றும் பேரிக்காய் பழங்கள் குவிந்துள்ளன. அதே போல தில்லி உள்ளிட்ட மாநிலங்களு க்கு செல்ல முடியாமல் 15 நாட்களுக்கும் மேலாக நெடுஞ்சாலையில் தேங்கி நின்ற சில லாரிகள் அழுகிய பழங்களுடன் ஆசாத்பூர் மண்டியை (தில்லி) அடைந்தன. பழங்கள் அழுகிய தால் விலை போகவில்லை. இதனால் ரூ.10,000 கோடி முதல் ரூ.12,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான கனரக லாரிகள் தில்லியைத் தாண்டி நேபாளம் மற்றும் வங்கதேச சந்தைக ளுக்குச் செல்கின்றன. அண்டை நாடுகளுக்கு செல்லும் லாரிகள் மிக மோசமான அளவில் (கடன் வாங்கி டீசல் போட்டதால்) பாதிக்கப் பட்டுள்ளன. ஆப்பிள் வர்த்தகத்துடன் நான் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்பில் இருக்கிறேன். இதுபோன்ற நெருக்கடியில் ஆப்பிள் தொழில் இருப்பதை நான் பார்த்ததே இல்லை” என அவர் கவலையுடன் கூறினார்.
துபாய் சாலை கட்காரி எங்கே போனார்
3 நாட்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஒன்றிய சாலைப் போக்கு வரத்து அமைச்சர் நிதின் கட்காரி கூறு கையில்,”துபாயின் சாலைகளை மேம்படுத்து வதற்கு நிதின் கட்காரியை 6 மாதங்கள் அனுப்புங்கள் என அந்நாட்டு இளவரசர் பிரதமர் மோடியிடம் கேட்டார். அந்த அளவுக்கு இந்தியாவின் சாலைகள் சிறப்பாக உள்ளன” என அவர் கூறினார். சாலைகளை மேம்படுத்த ஐக்கிய அரபு அமீரக இளவரசர் அழைத்தார் என்று பெரு மையாக கூறும் நிதின் கட்காரி, சொந்த நாட்டில் உள்ள ஜம்மு-காஷ்மீரின் நெடுஞ்சாலையை மேம்படுத்தாமல் எங்கே சென்றார்? என கேள்விகள் கிளம்பியுள்ளன.