மாலேகான் மசூதி குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து விடுதலை பிரக்யா சிங் உட்பட 7 பேரையும் ‘காப்பாற்றியது’ மோடி அரசு!
கடந்த 2008ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி அன்று மகாராஷ்டிராவில் வடக்குப் பகுதியான மாலேகான் மசூதி க்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வைக்கப் பட்டிருந்த குண்டுகள் வெடித்ததில் 6 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். “அபினவ் பாரத்” என்ற ஆர்எஸ்எஸ் பரிவார இயக்கத்தினால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப் பட்டது. வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் போலிச் சாமியாரும், முன்னாள் பாஜக எம்.பி.,யுமான பிரக்யா சிங் தாக்குரின் பெயரில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப் பட்டது. அவர் உள்பட 7 பேர் சட்டவிரோத நடவ டிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதாகி னர். இந்த வழக்கை முதலில் மகாராஷ்டிரா தீவிர வாத தடுப்பு நீதிமன்றம் விசாரித்தது. பின்னர் 2011 முதல் தேசிய புலனாய்வு மையத்தின் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. விடுதலை இந்த வழக்கின் விசாரணைகள் அனைத்தும் கடந்த ஏப்ரல் மாதத்தில் முடிவடைந்து தீர்ப்புக் காக ஒத்தி வைக்கப்பட்டது. 17 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்ற நிலையில் மும்பை என்ஐஏ நீதிமன்றம் வியாழக்கிழமை அன்று தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில் வழக்கிலிருந்து பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோகித், மேஜர் ரமேஷ் உபாத்யாய், சுதாகர் சதுர்வேதி, அஜய் ரஹிர்கர், சுதாகர் தர் துவிவேதி, சமீர் குல்கர்னி ஆகிய 7 பேரும் விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், இந்த சம்பவத்தில் பிரக்யா சிங் தாக்கூருக்கு தொடர்பு இருப்பதை நிரூபிக்க அரசு தவறிவிட்டது. பிரசாத் புரோஹித் வீட்டில் வெடிபொருள்கள் வைத்திருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. கைரேகை, வெடி மருந்து குப்பை என எதுவும் சேகரிக்கப்பட வில்லை. அபினவ் பாரத் அமைப்பு பயங்கர வாத நடவடிக்கைகளுக்கு பணத்தைப் பயன் படுத்தியதற்கான எந்த ஆதாரமும் இல்லை. குற்றச்சாட்டிற்கு உரிய ஆதாரத்தை வழங்க தவறிவிட்டதாக கூறி அனைவரும் விடுவிக்கப் பட்டுள்ளனர். குண்டுவெடிப்பில் உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதி அளிக்க வேண்டும். குண்டுவெடிப்பில் காய மடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கவும் என ஏஎன்ஐ நீதிமன்றம் தீர்ப்ப ளித்துள்ளது.
அமித் ஷாவுக்கு முன்கூட்டியே தெரிந்த தீர்ப்பு விபரம்?
மாலேகான் மசூதி குண்டுவெடிப்பு வழக்கின் தீர்ப்பு வியாழக்கிழமை அன்று காலை அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒருநாள் முன்கூட்டியே புதன்கிழமை அன்று மாலேகான் மசூதி குண்டு வெடிப்பு தீர்ப்பை தொடர்புபடுத்தி கூறுவதைப் போலவே நாடாளுமன்ற மாநி லங்களவையில் பேசினார். அதில்,”காவி பயங்கரவாதம் என்ற கோட்பாட்டை காங்கிரஸ் தனது திருப்திப்படுத்தும் அரசியலின் ஒரு பகுதியாகப் பெரிதுபடுத்தியது. வாக்குக ளுக்காக பயங்கரவாதத்திற்கு மதச் சாயம் பூச முயன்றனர். ஆனால் இந்திய மக்கள் அந்தப் பொய்யை நிராகரித்தனர். ஒரு இந்து எப்போதும் பயங்கரவாதி யாக முடியாது” என திடீரென பேசினார். அவர் ஏன் திடீரென இவ்வாறு கூறினார் என சந்தேகம் வலுத்தது. ஆனால் பேசிய 18 மணிநேரத்தில் மாலேகான் வழக்கு தீர்ப்பு குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு ஆதரவாக வந்துள்ளது. இதனால் அமித் ஷாவுக்கு முன்கூட்டியே தீர்ப்பு விபரம் தெரியுமா? என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.