states

img

மணிப்பூருக்கு வழி தெரிந்துவிட்டது மோடி இன்று பயணம்

மணிப்பூருக்கு வழி தெரிந்துவிட்டது மோடி இன்று பயணம்

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் பாஜக கட்டவிழ்த்து விட்ட வன்முறையால் இன்று வரை, அம்மாநிலம் இயல்பு நிலையை இழந்து கலவர பூமியாக காட்சி அளித்து வருகிறது. இந்த வன் முறையில் 250க்கும் மேற்பட்டோர் உயி ரிழந்ததுடன், பல லட்சம் மக்கள் சொந்த  மாநிலத்திலேயே அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். வன்முறை கட்டுக்குள் வராததால் 2025 பிப்ரவரி 13ஆம் தேதி பாஜக ஆட்சி கவிழ்க்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. குறிப்பாக மணிப்பூரில் வன்முறை வெடித்த பின்பு அம்மாநிலத்திற்கு பிரதமர் மோடி ஒருமுறை கூட நேரில் செல்லவில்லை. இதனை கண்டித்து  “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் கடும் கண்டனங்களை எழுப்பின. இந்நிலையில், “இந்தியா” கூட்ட ணிக் கட்சிகளின் தொடர் எதிர்ப்பால் மிரண்ட பிரதமர் மோடி சனிக்கிழமை அன்று மணிப்பூர் மாநிலத்திற்கு செல் கிறார். பிரதமர் மோடியின் இந்த 3 நாள் பயணத் திட்டத்தில் செப்., 13ஆம் தேதி மிசோரம் மாநிலத்தின் ஐஸ்வாலில் தொடங்கி, அதே நாளில் மணிப்பூரில் உள்ள சூராசந்த்பூர் மற்றும் இம்பா லுக்குச் செல்லவுள்ளார். பின்னர் மோடி செப்., 14ஆம் தேதி அசாமின் கவுகாத்தி க்குச் செல்கிறார். அதைத் தொடர்ந்து செப்டம்பர் 15ஆம் தேதி மேற்கு வங்கம் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின் போது 5 மாநி லங்களில் 70,000 ரூபாய் கோடிக்கும் அதி கமான அளவிலான திட்டங்களை மோடி துவங்கி வைக்க உள்ளதாக பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.  பாஜக நிர்வாகிகள் ராஜினாமா  பிரதமர் மோடி மணிப்பூர் மாநி லத்திற்கு வருகை தருவதை கண்டித்து பாஜக நிர்வாகிகள் 40 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.