states

மார்ச் 12 இல் முதுநிலை நீட் தேர்வு

புதுதில்லி,ஜன.15-  முதுநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு மார்ச் 12 ஆம் தேதி நடை பெறுகிறது என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. உச்சநீதிமன்றம் நீட் தேர்வுகளை நடத்த அனுமதியளித்து கடந்த வாரம் உத்தர விட்டது. இதையடுத்து நீட் தேர்வுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக முதுநிலை மருத்துவப் படிப்புக் கான நீட் தேர்வு  குறித்து தேர்வுமுகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி,  2022 ஆம் ஆண்டில் எம்.டி., எம்.எஸ்., படிப்புகளில் சேர நடத்தப்படும் முதுநிலை நீட் தேர்வு ( NEET – PG )  மார்ச் 12 ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் கணினி அடிப் படையில் நடைபெறும் என்றும் முதுநிலை நீட் தேர்வுக்கு ஜனவரி 15 அன்று மாலை 3 மணி முதல் பிப்ரவரி 4 ஆம் தேதி இரவு 11:55 மணி வரை https://nbe.edu.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்வின் முடிவுகள் மார்ச் 31 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தேசிய தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.