“இந்தியா” கூட்டணி எம்.பி.,க்களை மிரட்டும் மக்களவை சபாநாயகர்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 21ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகி றது. இந்தக் கூட்டத்தொடரில் பஹல்காம் தாக்குதல், ஆபரேசன் சிந்தூர், பீகார் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என நாடாளு மன்றம் இரு அவைகளிலும் “இந்தியா” கூட்டணி எம்.பி.,க்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். “இந்தியா” கூட்டணி எம்.பி.,க்களின் தொடர் முழக்கம் மற்றும் போராட்டங்க ளால் ஆபரேசன் சிந்தூர், பஹல்காம் தாக்குதல் குறித்து மக்களவையில் விவா தம் நடைபெற்றது. ஆனால் பீகார் வாக்கா ளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவா திக்க அஞ்சி வரும் மோடி அரசு, நாடாளு மன்றத்தை தொடர்ச்சியாக முடக்கி வரு கிறது. இந்நிலையில், சுதந்திர தின விடு முறையை அடுத்து திங்களன்று நாடாளு மன்றம் கூடியது. வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க வலியுறு த்தி “இந்தியா” கூட்டணி எம்.பி.,க்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதனால் மக்க ளவை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியதும் மக்கள வை சபாநாயகர் ஓம் பிர்லா,“கோஷங்க ளை எழுப்புவதற்கு பதிலாக கேள்வி களைக் கேட்பதற்கு உங்கள் சக்தியை பயன்படுத்துங்கள். இது நாட்டு மக்க ளுக்கு நன்மை பயக்கும். அரசாங்க சொத்துக்களை அழிப்பதற்காக மக்கள் உங்களைத் தேர்ந்தெடுக்கவில்லை. நீங்கள் அரசாங்க சொத்துக்களை அழிக்க முயற்சித்தால், நான் சில தீர்க்கமான முடி வுகளை எடுக்க வேண்டியிருக்கும். நாட்டு மக்கள் உங்களைப் பார்ப்பார்கள். பல சட்டமன்றங்களில் இதுபோன்ற சம்ப வங்களுக்கு உறுப்பினர்கள் மீது நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நான் உங்க ளை மீண்டும் எச்சரிக்கிறேன். அரசாங்க சொத்துக்களை அழிக்க முயற்சிக்காதீர் கள். இது உங்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள்” என அவர் கூறினார். சபாநாயகர் மிரட்டல்? “இந்தியா” கூட்டணி எம்.பி.,க்கள் பீகார் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க மட்டுமே கோரிக்கை விடுத்து, கிளர்ச்சி மற்றும் போராட்டங்க ளை மட்டுமே நடத்தி வருகின்றனர். மற்ற படி நாடாளுமன்ற சொத்துக்களை அவர்கள் சேதமடைய செய்யவில்லை. ஆனால் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா,“அரசாங்க சொத்துக்களை அழிக்க எந்த உறுப்பினருக்கும் உரிமை இல்லை என்று நான் உங்களை எச்ச ரிக்கிறேன். நீங்கள் அரசு சொத்துகளை சேதப்படுத்தினால் உங்கள் மீது நட வடிக்கை எடுக்கப்படும்” என கூறியிருப் பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.