states

img

கங்கை நதி அரிப்பை தடுக்கக் கோரி இடது முன்னணி போராட்டம்

கங்கை நதி அரிப்பை தடுக்கக் கோரி இடது முன்னணி போராட்டம்

மேற்கு வங்க மாநிலத்தில் கங்கை நதி அரிப்பால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகள், விவசாய நிலங்களை இழந்து அகதிகளாக மாறி வருகின்றனர். இந்த விவகாரத்தை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் கண்டுகொள்ளாமல் உள்ளன. இத்தகைய சூழலில் கங்கை அரிப்புச் சிக்கலுக்கு உடனடியான தடுப்பு, மறுவாழ்வு நடவடிக்கைகள் மற்றும் நிரந்தரத் தீர்வு ஆகியவற்றை மேற்கொள்ள வலியுறுத்தி இடது முன்னணி சார்பில் பரக்கா அணை அலுவலகம் அருகில் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முகமது சலீம் உள்ளிட்ட இடது முன்னணி தலைவர்கள் பங்கேற்றனர்