சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் தாமஸ் ஐசக்
லட்சத்தீவு நிர்வாகம் (மோடி அரசு கட்டுப்பாட்டில்) தீவு வாசிகளைத் துன்புறுத்துவதில் உறுதியாக உள்ளது. நிலத்தைக் கைப்பற்றுதல், கேரளாவுக்கான மீன்பிடித் தொழில் மற்றும் பயணத்தைத் தடுக்கிறது. தற்போது சாலைகளுக்கு அருகிலுள்ள மரங்களில் தேங்காய்களைப் பறிப்பதற்கும், ஏறுபவர்கள் மற்றும் கையாளுபவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்களுக்கும் 24 மணி நேரத்திற்கு முன்பே அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
திரிணாமுல் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன்
அமெரிக்கா, இந்திய பொருட்கள் மீது வரி உயர்வு அறிவித்து 50 நாட்கள் ஆகிவிட்டன. மணிப்பூரில் வன்முறை தொடங்கி 862 நாட்கள் ஆகியுள்ளன. மேற்கு வங்கத்தின் 100 நாள் வேலை திட்ட நிதி நிறுத்தப்பட்டு 1,282 நாட்கள் ஆகியிருக்கின்றன. மக்களவையில் பதிலளிக்காமல் 4,117 நாட்களை கடத்தியிருக்கிறார் பிரதமர் மோடி. நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய எண்கள் இவை.
சிவசேனா (உத்தவ்) எம்.பி., பிரியங்கா சதுர்வேதி
ஒரு ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகள் இருப்பது இயற்கை. ஆனால், அந்த வேறுபாடுகள் வன்முறைக்கு வழி கொடுக்கக் கூடாது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் ஆதரவாளர் சார்லி கிர்க்கின் படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்
நாய்களால் குழந்தைகள் தான் நிறைய பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் நாயே இருக்கக் கூடாது என சொல்லவில்லை. நாயை விட குழந்தைகள் முக்கியம்; நாய்களுக்கு ஆதரவாக பேசுபவர்கள், தெரு நாய்களை தத்தெடுத்து வளருங்கள்.
