states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கேரள அமைச்சர் பி.ஏ.முகமது ரியாஸ்

கேரளா முழுவதும் நடைபெறும் ஓணம் கொண்டாட்டங்களில், மாநில தலைநகரில் நடைபெறும் கொண்டாட்டங்களே முக்கியமானதாக அமையும். 10,000 கலைஞர்களின் நிகழ்ச்சிகள், பல்கலைக்கழக மைதானத்தின் மேல் 15 நிமிட டிரோன் ஒளி நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் சுமார் 1,000 டிரோன்கள் பங்கேற்க உள்ளன. 

ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய்

அதிகாரத்தில் இருப்பவர்கள் வெறுப்பு பரப்பும் வகையில் பேசி அமைச்சர்களாகிறார்கள். மக்கள் பிரதிநிதிகள் ஆகிறார்கள். அதிகாரத்துக்கு வெளியே இருப்பவர்கள், தேசதுரோகிகள் என முத்திரை குத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

சிவசேனா (உத்தவ்) எம்.பி., பிரியங்கா சதுர்வேதி

தில்லி கலவர வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி உமர் காலித் உள்ளிட்ட 10 பேரையும் 5 ஆண்டுகள் ஜாமீன் இல்லாமல் சிறையில் வைத்திருப்பது நமது நீதித்துறையில் பதிந்துள்ள அழிவின் சோகமான பிரதிபலிப்பாகும். இது அனைவரும் அறிந்திருந்தாலும், யாரும் பேசாத ஒரு விஷயம்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன்

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு விவசாயிகள் நலனை முற்றிலும் புறக்கணித்து வருகிறார். அதாவது அவரது அரசாங்கம் விவசாயிகளை கைவிட்டு கள்ளச் சந்தைக்கு உதவி வருகிறது. இது மிகவும் மோசமான பின்விளைவை ஏற்படுத்தும்.