உச்சநீதிமன்றத்தின் உத்தரவைப் புறக்கணித்த கேரள ஆளுநர்
துணைவேந்தர்கள் நியமனம் குறித்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவைப் புறக்கணித்த ஆளு நர் ராஜேந்திர அர்லேகர், அரசு பரிந்து ரைத்த பட்டியலை நிராகரித்தார். டிஜி ட்டல், தொழில்நுட்ப பல்கலைக்கழ கங்களுக்கு தற்காலிக துணைவேந்தர் களை மீண்டும் நியமித்து ஆளுநர் உத்த ரவு பிறப்பித்தார். டாக்டர் சிசா தாமஸ், டாக்டர் கே.சிவ பிரசாத் ஆகியோருக்கு மீண்டும் பொறுப்பு வழங்கி ஆளுநர் உத்தரவு பிறப்பித்த பிறகு, இருவரும் பல் கலைக்கழகம் சென்று பொறுப்பேற்ற னர். தற்காலிக துணைவேந்தர்களின் நிய மனம் அரசு பரிந்துரைக்கும் பட்டியலில் இருந்து இருக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை வேந்தராக வும் இருக்கும் ஆளுநர் புறக்கணித் துள்ளார். தற்காலிக நியமனத்திற்காக அரசு வழங்கிய மூன்று பேர் கொண்ட குழுவை நிராகரித்து தற்போதைய நியமனம் செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப பல்கலைக்கழக சட்டம் - பிரிவு 13(7), டிஜிட்டல் பல்கலைக்கழக சட்டம் - பிரிவு 10(11) ஆகியவற்றை உச்ச நீதிமன்றம் அண்மையில் சுட்டிக்காட்டி யது. தற்போதுள்ள துணைவேந்தர்கள் தொடர புதிய அறிவிப்பை வேந்தர் வெளி யிட முடியும் என்றும், ஆனால் மேற்கண்ட பிரிவுகளின்படி மட்டுமே நியமனம் செய்யப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.