கேரளம் : அமீபா மூளைக்காய்ச்சலுக்கு 3 மாத குழந்தை பலி பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு
கோழிக்கோடு கேரள மாநிலத்தில் அரிய வகை நோயான அமீபா மூளைக்காய்ச்சல் தொற்று வேகமாக பரவி வருகிறது. தேங்கிக் கிடக்கும் அசுத்தமான தண்ணீரில் வாழக்கூடிய இந்த அமீபா தொற்று, குளிக்கக் கூடியவர்களின் மூக்கு துவாரத்தின் வழியாக உடலுக்குள் சென்று மூளையை நேரடியாக தாக்குகின்றது. இதன்மூலம் தீவிர காய்ச்சல் பாதிப்புடன் அமீபா தொற்று தாக்குதலுக்கு உள்ளானவர்கள் 48 மணிநேரத்திலேயே உயிரிழக் கின்றனர். இந்நிலையில், கோழிக்கோடு மாவட்டம் தாமரச்சேரி பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி முதன் முத லாக ஆகஸ்ட் 31அன்று அமீபா மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரி ழந்தார். அவரைத் தொடர்ந்து சிறுமி யின் சகோதரனான 7 வயது சிறுவன் உள்பட 8 பேருக்கு அமீபா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர்களுக்கு கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 8 பேரில் ஒருவராக சிகிச்சை பெற்று வந்த 3 மாத குழந்தை திங்களன்று அதி காலை உயிரிழந்தது. அமீபா மூளைக்காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளான 2 பேர் கடந்த 24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து இறந்தி ருப்பது, கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன்மூலம் கேரளாவில் அமீபா மூளைக்காய்ச்சலுக்கு பலியான வர்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந் துள்ளது. இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளில் அம்மாநில சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடு பட்டு வருகின்றனர்.