25 புத்தகங்களுக்குத் தடை விதித்து காஷ்மீர் ஆளுநர் எதேச்சதிகாரம்!
சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கடும் எதிர்ப்பு
ஜம்மு - காஷ்மீரில் 25 புத்த கங்களுக்கு, தடை விதித்தி ருக்கும் துணைநிலை ஆளுந ரின் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித் துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ஜம்மு - காஷ்மீர் துணைநிலை ஆளுநர், 25 புத்தகங்கள் மீது தடை விதித்திருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு எதிர்ப்பினைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்த தணிக்கையானது, எதேச்சா திகாரத்தின் மற்றொரு வெளிப்பாடாக வும், கருத்துச் சுதந்திரத்தின் மீதான ஒரு வெட்கக்கேடான தாக்குதலாகவும் உள்ளது. பாஜக தலைமையிலான ஒன்றிய அரசின் பிரதிநிதியாகச் செயல்படும் துணைநிலை ஆளுநர், இந்திய அரசிய லமைப்புச் சட்டம் உத்தரவாதம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளை மூர்க்கத்தனமாக பறிக்கும் நடவ டிக்கையில் இறங்கியுள்ளார். ‘பிரிவி னைவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு’ உதவுவதாகக் கூறி, இந்தப் புத்தகங்க ளுக்கு தடை விதித்துள்ளார். உண்மை யில், இவை காஷ்மீரின் வரலாற்றையும் அதன் தற்போதைய பிரச்சனைகளின் வேர்களையும் ஆராயும் நூல்களாகும். இந்த 25 புத்தகங்களும் ஏ.ஜி. நூரணி, அனுராதா பாசின், அருந்ததி ராய் மற்றும் பல பிரபல எழுத்தாளர்களின் படைப்புகளாகும். இந்தப் புத்தகங்கள் மீதான தடையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கோருகிறது. ஜம்மு - காஷ்மீ ருக்கான மாநில அந்தஸ்து, முழு ஜன நாயக உரிமைகளுடன், தாமதமின்றி மீட்டெடுக்கப்பட வேண்டும். தேர்ந்தெ டுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு முழு நிர்வாக அதிகாரம் வழங்கப்பட வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் மட்டுமே ஜம்மு - காஷ்மீர் மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற முடியும். இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.