மீட்பு நடவடிக்கையிலும் ஹிந்தி... வடவர், தென்னவர் பாகுபாடு?
உக்ரைனில் மாணவர்களை மீட்கும் பணி யில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், இந்திய மாணவர்களுக்கு உள்ளேயே வடமாநிலத்தவர், தென் மாநிலத்தவர் என பிரித்து பாகுபாடு காட்டுவது சமூக வலைதளங்கள் மூலம் விவாதமாகியுள்ளது. ஒருசில அமைப்பினர், வடமாநில மாணவர்களை மட்டும் அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச் செல்கின்றனர். அந்த மாணவர்கள், குறிப்பிட்ட “இந்து அமைப்பின்” கோயில் முத்திரை பதித்த பிரத்யேக மான டி-ஷர்ட்களை அணிய வைக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனைச் சுட்டிக்காட்டி, தமிழக மாணவர் ஒருவர், “எங்களை எல்லாம் பார்த்தால் மனுஷங்களா தெரி யலையா.. ஏன் இப்படி பிரிவினை? நீங்கள் அனைத்து இந்திய மாணவர்களையும் ஒரேமாதிரிதானே நடத்த வேண்டும்? இதோ இந்த டி-ஷர்ட்டில் பொறிக்கப் பட்டுள்ள முத்திரை என்ன? எங்களுக்கு இப்பவே தெரிந் தாக வேண்டும் யார் இவர்கள்? எதற்காக இவர்களை மட்டும் பாதுகாப்பாக மீட்டு அழைத்து செல்கிறீர்கள்?” என்று கொதித்தெழுந்து பேசும் வீடியோ வெளியாகி யுள்ளது. மேலும், ஆங்கிலத்தில் உதவிகளை கேட்டால், அவர்கள் இந்தியில்தான் பதிலளிப்பதாகவும், ஆங்கி லத்தில் பேச மறுப்பதாகவும் மாணவர்கள் குற்றச் சாட்டுகளை எழுப்பியுள்ளனர். ரோஜா பூ கொடுப்பதால் என்ன பயன்?
தாயகம் திரும்பும் இந்தியர்களை ஒன்றிய பாஜக அமைச்சர்கள் ’பாரத் மாதா கி ஜே’ என்ற கோஷத்து டன் ரோஜா பூ கொடுத்து வரவேற்று வருவதும் ஏற்கெ னவே சர்ச்சையை ஏற்படுத்தியது. “நாங்கள் உக்ரைன் எல்லையைக் கடந்து ஹங்கேரி வந்த பின்னர்தான் எங்களுக்கு இந்திய தூதரகத்தின் உதவி கிடைத்தது. அதுவரை எங்களால் தூத ரகத்தைச் சேர்ந்த யாரையும் தொடர்பு கொள்ள முடிய வில்லை. உள்ளூர்வாசிகளின் உதவியுடன் ஒரு வழி யாக நாங்கள் ஹங்கேரியின் எல்லையை அடைந் தோம். இது எல்லாமே எங்களின் சொந்த முயற்சி. ஆனால், தில்லிக்கு வந்திறங்கியவுடன் எங்களுக்கு ரோஜா மலர் கொடுக்கப்பட்டது. இதை வைத்து நாங் கள் என்ன செய்யப்போகிறோம்...?” என்று தில்லி வந்திறங்கிய பீகார் மாநிலம் மோத்திஹரி பகுதியைச் சேர்ந்த திவ்யன்ஷு சிங் என்ற மருத்துவ மாணவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப் பிடத்தக்கது.
புதுதில்லி, மார்ச் 5- உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்பதற் காக சென்ற இடத்தில், ஒன்றிய பாஜக அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, ருமேனியா மேயருடன் தகராறில் ஈடு பட்ட வீடியோ சமூகவலைதளங்க ளில் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் ராணுவ நடவ டிக்கைக்கு உள்ளாகியிருக்கும் உக் ரைனில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உட்பட சுமார் 40 ஆயிரம் இந்தியர்கள் மாட்டிக் கொண்டுள்ள னர். அவர்களை முன்கூட்டியே இந் தியா அழைத்து வருவதற்கு நட வடிக்கை எதுவும் மேற்கொள்ளாத பிரதமர் நரேந்திர மோடி, உ.பி. தேர் தல் பிரச்சாரத்திலேயே தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தார். இது நாடு முழுவதும் கடும் கண்டனங்களுக்கு உள்ளானதற்கு பின்பே, ‘ஆப ரேஷன் கங்கா’ என்ற பெயரில், மீட்பு நடவடிக்கையை அறிவித்தார். இந்திய மாணவர்களுக்கு உத விடவும் அவர்களை உக்ரைனில் இருந்து வெளியேற்றி அழைத்து வரும் பணியை ஒருங்கிணைக்கவும் ஒன்றிய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜு, வி.கே. சிங் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இதன்படி சிவில் விமானப் போக்கு வரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ருமேனியாவிற்குச் சென் றார். அவ்வாறு சென்ற இடத்தில் தான், ருமேனிய மேயருடன் தக ராறில் ஈடுபட்டுள்ளார்.
உக்ரைனிலிருந்து சாலைமார்க்க மாக வெளியேறி ருமேனியாவுக்குச் சென்ற இந்திய மாணவர்களுக்கு, இவ்வளவு நாளும் அங்குள்ள மேயர்தான், அவர்கள் கூடவே இருந்து தேவையான வசதிகளை செய்து கொடுத்து வந்துள்ளார். இத னிடையே, மாணவர்களை அழைத் துச் செல்ல இந்தியாவிலிருந்து ஒன் றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந் தியா வந்திருப்பதையொட்டி, தன் னால் பாதுகாப்பு அளிக்கப்பட்ட மாணவர்களிடம், “அவர்கள் எப் போது இந்தியா செல்வார்கள்.. அதற்கான முன்னேற்பாடுகள் என்ன?” என்பது குறித்தெல்லாம் விளக்கியுள்ளார். அப்போதுதான், ஜோதிராதித்ய சிந்தியா குறுக்கிட்டு “எங்களின் மாணவர்களிடம் நீங்கள் என்ன பேசுவது? நான்தான் பேசுவேன்.. நான்தான் விவரங்களை கூறு வேன்..” என்று அடம்பிடித்துள்ளார். இதனால் ஆவேசமடைந்த ருமே னிய மேயரும், “இந்த மாணவர் களை நான்தான் பாதுகாத்தேன். அவர்களுக்கு தேவையான உணவு, உடை அனைத்தையும் தந்தேன். அப்படிப்பட்ட நான் பேசக்கூடாது என்று நீங்கள் சொல்வதை ஏற்க முடியாது..” என்று காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். இந்திய மாணவர்களும் அவரது பேச்சை வர வேற்றுக் கைதட்டியுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூகவலை தளங்களில் வெளியாகியுள்ளது.