ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன்
நம்பிக்கைக்கான இன்னொரு கீற்றும் (வான்சுக்) சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறது. நீர், வனம், நிலம், மொழி, பண்பாடு, உரிமை ஆகியவற்றை பாதுகாப்பதற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவரின் குரலை ஒடுக்க உருவாக்கப்படும் கட்டுக்கதைகளை நாட்டு மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங்
நாட்டில் வேலையின்மை, விவசாய நெருக்கடி, கல்வி யின்மை மற்றும் மருத்துவச் சீர்கேடு ஆகிய பிரச்சனைகளை மறைக்க, மதத்தின் பெயரால் விளையாட்டுகள் நடத்தப் படுகின்றன. இந்த சதியில் பாஜக அரசும், மதத் தலைவர்க ளும் கூட்டாக உள்ளனர். இத்தகைய சதி வேலைகளை புரிந்து கொண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லை எனில் அழிவு வேலையில் நம் பங்கும் இடம்பெறும்.
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்
சோனம் வாங்சுக் போன்ற கல்வியாளர்களும், நேர்மையானவர்களும் தேசத் துரோகிகள் என முத்திரை குத்தப்பட்டு ஒடுக்கப்படுகிறார்கள். இதன்மூலம் ஒன்றிய ஆட்சியில் இருப்பவர்கள் கொண்டிருக்கும் அடாவடியை புரிந்து கொள்ள வேண்டும். ஒடுக்குமுறைக்கான ஒவ்வொரு முயற்சிக்கும், பேரெழுச்சியுடன் பதில் சொல்லப்படும்.
சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்
உத்தரப்பிரதேச மாநிலம் பண்டாவில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் ஒரு இளைஞர் வேலை கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டார். இது மிகவும் வருத்தமளிக்கிறது. இளைஞர்கள் இந்த திறமையற்ற அரசாங்கத்தை அதிகாரத்திலிருந்து அகற்றுவார்கள்.
