சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷின் இளைய சகோதரரான பிரதீக் யாதவின் மனைவி அபர்ணா யாதவ், உ.பி. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா முன்னிலையில் பாஜக-வில் இணைந்துள்ளார். “பாஜகவின் சாத னைகளும், செயல்பாடுகளும் எனக்குப் பிடித்தது. பிரதமர் மோடியின் பணிகள் என்னை ஈர்த்தன” என்று அவர் குறிப் பிட்டுள்ளார். “எனது குடும்ப உறுப்பினர்கள் நலன்மீது பாஜக-வுக்கு எவ்வளவு அக்கறை பாருங்கள்” என்று அபர்ணா விவகாரத்தை ஏற்கெனவே அகி லேஷ் கிண்டலடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.