புதுதில்லி, ஜூலை 7 - இந்திய அரசு கேட்டுக்கொண்ட தற்கு இணங்க லீனா மணிமேகலை பதி விட்டிருந்த ‘காளி’ ஆவணப்படத்தின் போஸ்டர் டுவிட்டர் பக்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆவ ணப்பட இயக்குநர் லீனா மணிமேக லை. தற்போது கனடா நாட்டின் டொ ராண்டோ நகரில் வசித்து வருகிறார். இவர், புதிதாக ‘காளி’ என்ற ஆவ ணப்படத்தை இயக்கி நடித்துள்ளார். பெண் தெய்வமான காளி, ஒரு மாலை நேரத்தில் டொராண்டோ நகர த்தின் தெருக்களில் உலா வரும்போது நடக்கும் சம்பவங்களைப் பற்றியது என்று கூறப்படும் இந்த ஆவணப் படத்தின் போஸ்டர் கனடா நாட்டின் டொராண்டோ நகரில் உள்ள ஆகா கான் அருங்காட்சியகத்தில் கடந்த ஜூலை 2-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அந்த போஸ்டர், காளி வேடமணிந்த பெண்ணின் கையில் சிகரெட் இருப்பது போலவும், மற்றொரு கையில் திரிசூலம், அரிவாள் ஆகிய ஆயுதங்களுடன் எல்ஜிபிடி (LGBTQ+) எனப்படும் தன்பாலின உறவாளர்கள் மற்றும் வரன்முறைக்கு அப்பாற்பட்ட பாலின உறவாளர் சமூகத்தை அடை யாளப்படுத்தும் ‘வானவில்’ கொடி இருப்பது போலவும் வடிவமைக்கப் பட்டு இருந்தது.
இது சமூகவலைதளங்களில் வெளி யான நிலையில், அதற்கு இந்துத்துவா அமைப்புகளிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. “லீனா மணிமேகலை யைக் கைது செய்!” (#ArrestLeena Manimekalai) என்ற ஹேஷ்டேக்-கை அவர்கள் டிரெண்ட் ஆக்கினர். இந்தியாவில் இந்துத்துவா அமைப்பினர் கொடுத்த புகாரின் பேரில், உத்தரப் பிரதேசம், தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் லீனா மணிமேகலை மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. போஸ்டரை திரும்பப் பெறக்கோரி அவருக்கு கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டன.
கனடாவில் உள்ள இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் இந்த போஸ்டரை அருங் காட்சியகத்தில் இருந்து அப்புறப் படுத்தவேண்டும் என்று கோரிக்கை வைப்பதாக இந்திய தூதரக அதிகாரி களே கனடா அரசிடம் நேரடியாக முறையிட்டனர். இந்த படம் தொடர்பான அனைத்து ஆத்திரமூட்டும் விஷ யங்களையும் அகற்றுமாறு அந்த நாட்டு அதிகாரிகளை ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டி ருந்தது. இந்நிலையில், டுவிட்டர் நிறு வனத்திற்கும் பலர் புகார்களை அனுப்பி னர். இதையடுத்து, டுவிட்டரில் லீனா மணிமேகலை பதிவிட்டிருந்த காளி படத்தின் போஸ்டர் நீக்கப்பட்டுள்ள தாக டுவிட்டர் நிறுவனம் தற்போது அறி வித்துள்ளது. “சட்டரீதியான கோரிக் கையை ஏற்று லீனா மணிமேகலையின் போஸ்டா் பதிவு நீக்கப்பட்டுள்ளது” என்று டுவிட்டர் கூறியுள்ளது. இதனிடையே, இயக்குநர் லீனா மணிமேகலை தனது டுவிட்டர் பக்கத் தில் கிராமப்புறத்தைச் சேர்ந்த கூத்துக் கலைஞர்கள் சிவன், பார்வதி வேட மணிந்த நிலையில், வாயில் சிகரெட்டு டன் இருக்கும் புதிய புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். கிராமப் புறங்களில் இப்போதும் இதுபோன்ற காட்சிகளை பார்க்கலாம் என்பதாக அவர் இந்த புகைப்படத்தை பதிவிட்டுள் ளார்.