நேபாளத்தில் இருந்து தாயகம் திரும்பும் இந்தியர்கள்
வன்முறையால் நேபாள நாட்டில் தொடர்ச்சியாக பதற்றம் நீடித்து வருகிறது. இதனால் அந்நாட்டில் இருந்து இந்தியர்கள் தாயகம் திரும்பி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 3 நாட்களில் மட்டும் மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி யில் உள்ள பனிடாங்கி எல்லை வழியாக நேபாளத்தில் இருந்து சுமார் 2,000 இந்தி யர்கள் நாடு திரும்பியுள்ளதாக செய்தி கள் வெளியாகியுள்ளன. பனிடாங்கி எல்லை வழியாக வருகை தந்தவர்கள் அனைவரும் ஒன்றிய அரசின் உதவி இல்லாமல் தாயகம் திரும்பியுள்ளனர். எனினும் அந்த 2,000 பேரும் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என உறுதி யாக செய்திகள் வெளியாகவில்லை.