states

img

கவுகாத்தி கல்லூரி தேர்தலில் இந்திய மாணவர் சங்கம் வெற்றி

புதுதில்லி, பிப்.20- அசாம் மாநிலம் கவுகாத்தி கல்லூரி யூனியன்  தேர்தலில் இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ) வெற்றி பெற்றது. மஜ்னூர் ஆலம் தலைவராக வும், ஜாஸ்மின் சுல்தானா துணைத் தலைவராகவும், பிங்கி தாக்கூர் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கோரேஷ்வர் கல்லூரியில் விளையாட்டு செயலாளர் பதவிக்கு ஹீரக் ஜோதிநாத்  மற்றும் நாகோன் கல்லூரியில் பத்திரிகை செயலாளர் பதவியை ரிஷப் புயன் வென்றனர். அனைத்து அசாம்  மாணவர் சங்க வேட்பாளர்களை தோற்கடித்து இந்த வெற்றியை எஸ்எப்ஐ பெற்றுள்ளது.