2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வியாழக்கிழமை அன்று தொடங்கிய நிலையில், வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 128 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 448 ரன்கள் குவித்தது. துருவ் ஜூரல் (125), ஜடேஜா (104), கே.எல்.ராகுல் (100) ஆகிய 3 இந்திய வீரர்கள் சதமடித்து அசத்தினர். முதலில் பேட்டிங் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 44.1 ஓவர்களில் 162 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. சனிக்கிழமையன்று தொடர்ந்து 3ஆவது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் வியாழக்கிழமை அன்று நிறைவு பெற்றது. இந்த விழாவில் 5.80 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். ரூ.25.12 கோடி காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது என திருமலை திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது.
சிங்கப்பூரில் நீரில் மூழ்கி உயிரிழந்த பிரபல பாடகர் அசாமின் ஜூபின் கர்க் மரண வழக்கில் அவரது சக இசைக்கலைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் கொலைக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பீகாரில் ரயில் மோதி 4 பேர் பலி
பீகார் மாநிலத்தின் புர்னியாவில் வெள்ளிக்கிழமை அதிகாலை தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது வந்தே பாரத் ரயில் மோதி 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல்சிதறி பலியாகினர். பலத்தகாயங்களுடன் ஒருவர் சிகிச்சைக்காக புர்னியா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளார். குறிப்பாக பலியானவர் கள் 14 முதல்18 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், அவர்கள் அனைவரும் கஸ்பா பகுதியைச் சேர்ந்தவர்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த விபத்து தொடர்பாக புர்னியா நிலைய மேலாளர் முன்னா குமார் கூறு கையில், “கதிகார் - ஜோக்பானி பிரிவில் அதிகாலை 4 மணியளவில் இந்த கோரச் சம்பவம் நடந்தது. இருள் மற்றும் வானிலை மேகமூட்டமாகவும் இருந்த தால், சிறுவர்கள் வேகமாக வந்த ரயிலை சரியான நேரத்தில் கவனிக்க முடியவில்லை. இதனால் தான் விபத்து நிகழ்ந்தது” என அவர் கூறினார்.
வீடு திரும்பினார் மல்லிகார்ஜுன கார்கே
காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே (83) நெஞ்சுவலி காரணமாக பெங்களூருவில் (கர்நாட கா) உள்ள எம்.எஸ்.ராமையா தனியார் மருத்துவமனையில் அக்.,1ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை க்குப் பிறகு கார்கேவிற்கு சீரற்ற இதய துடிப்பு இருப்பதால், அவருக்கு இதயத்தில் பேஸ்மேக்கர் கருவி (இதய துடிப்பை சீராக்கும் கருவி) பொருத்த வேண்டும் என்றும், உடனடியாக இதற்காக அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறினர். இந்நிலையில், கார்கேவுக்கு பேஸ் மேக்கர் பொருத்தும் அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை சிகிச்சை முடிந்து மருத்துவமனையி லிருந்து கார்கே வீடு திரும்பினார். விரை வில் அவர் தனது பணிகளை மீண்டும் தொடங்குவார் என காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
