states

img

அடிப்படை வசதிகள் இன்மையால் தவிக்கும் பாலியப்பட்டு கிராம மக்கள்

அடிப்படை வசதிகள் இன்மையால் 
தவிக்கும் பாலியப்பட்டு கிராம மக்கள்

திருவண்ணாமலை,ஆக.12- திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், பெரியபாலியப்பட்டு கிராமம் மாரியம்மன் நகர் பகுதியில் வசிக்கும் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர். விவசாயம் செய்து வாழ்வாதாரம் நடத்தும் இந்த குடும்பத்தினர், பொது மக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் விவசாயிகள் பயன்படுத்துவதற்கு போதிய சாலை வசதி இல்லை. தெரு விளக்கு இல்லாததால் இரவு நேரங்களில் இருளில் தவித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் சாலை அமைப்ப தற்காக வெறும் ஜல்லி, கற்களை கொட்டி விட்டுச்சென்ற நிலையில் இதுவரை சாலை அமைக்கப்படவில்லை. இதனால் வயதானவர்கள், சிறு குழந்தைகள், விவ சாயிகள் தங்கள் விளை பொருட்களை விற்ப னைக்கு கொண்டு செல்பவர்  கள் அந்த வழியாக செல்ல முடியாத சூழல் ஏற்பட் டுள்ளது. இதுகுறித்து திரு வண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிபிஎம் கிளைச் செய லாளர் பெரியசாமி கோரி க்கை மனு அளித்தார். அதில்,“பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சாலை வசதி மற்றும் தெரு விளக்கு வசதிகளை செய்து தர வேண்டும்”என்று வலி யுறுத்தியுள்ளார். கட்சியின் மாவட்டச் செயலாளர் ப.செல்வன், செயற்குழு உறுப்பினர் எஸ்.ராமதாஸ், விவ சாயிகள் சங்க நிர்வாகி வள்ளிக்கண்ணன் ஆகி யோர் உடனிருந்தனர்.