states

img

சிறையில் அடைத்தாலும் அஞ்சமாட்டேன்

புதுதில்லி, மார்ச் 25- “தகுதி நீக்கம் செய்தாலும், சிறையில்  அடைத்தாலும் உண்மையை தொடர்ந்து  பேசுவேன்; மோடி - அதானி உறவு குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புவேன்; அச்சு றுத்தலுக்குப் பயந்து மன்னிப்பு கேட்ப தற்கு நான் ஒன்றும் சாவர்க்கர் அல்ல” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். பதவி நீக்கத்திற்கு உள்ளான காங்கி ரஸ் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை யன்று பிற்பகல் 1 மணியளவில் செய்தியா ளர் சந்திப்பை நடத்தினார். அப்போது தன்மீதான நடவடிக்கைகள் குறித்து, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு விரிவான பதில்களை அளித்தார்.  அதில் அவர் கூறியிருப்பதாவது:  இந்தியாவின் ஜனநாயகத்தை மீட்டெ டுக்க வெளிநாடுகளின் தலையீட்டை நான்  விரும்புவதாக பாஜகவினர் குற்றம்சாட்டு கிறார்கள். உண்மையில் பாஜக அமைச்  சர்கள் என்னைப் பற்றி பொய் சொல்கி றார்கள். வெளிநாட்டினரை தலையிடும் படி நான் ஒருபோதும் கேட்கவில்லை. 

இந்திய ஜனநாயகம் அச்சுறுத்த லுக்கு உள்ளாகி வருகிறது என்பதற்கான  உதாரணங்களை நான் பலமுறை வெளி யிட்டு இருக்கிறேன். இந்தியாவின் பிரச்ச னையை இந்தியாவிலேயே தீர்க்க வேண்  டும் என்றுதான் லண்டனிலும் பேசினேன்.  இந்திய விவகாரங்களில் வெளிநாடு களைத் தலையிடுமாறு ஒருபோதும் கூறி யதில்லை. நான் உண்மையை மட்டுமே  பேசினேன். என்னைத் தகுதி நீக்கம் செய்து கைது செய்தாலும் தொடர்ந்து உண்மையைப் பேசுவேன். இந்த தேசம்  எனக்கு அனைத்தையும் கொடுத்துள் ளது. எனவே நான் இந்த தேசத்திற்காக அனைத்தையும் செய்வேன். தகுதி நீக்  கத்தின் மூலம் எனது குரலை ஒடுக்கிவிட முடியாது. இன்றைய அரசியல் சூழலுக்கும், நான் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கும் நேரத்திற்கும் தொடர்பிருக்கிறதா? என்று நீங்கள் கேட்பீர்களானால், தொடர்பு இருக்கிறது. ஒன்றைப் புரிந்து கொள்  ளுங்கள். பிரதமருக்கும், அதானிக்கு மான தொடர்பு குறித்து நாடாளுமன்றத் தில் புதிய தகவலை பேசிவிடுவேன் என்ற  காரணத்தாலே தகுதி நீக்கம் செய்யப்பட்  டுள்ளேன். அதானி பிரச்சனையை திசைத்  திருப்பவே இந்த நாடகத்தைக் கையில் எடுத்துள்ளனர். நீதிமன்றத் தீர்ப்பை நான்  விமர்சிக்க விரும்பவில்லை. இருப்பினும்  நான் கேட்கும் கேள்விகளை யோசித்தே கேட்கிறேன். பிரதமர் மோடி பயத்தின் காரணமாக என்னை தகுதி நீக்கம் செய்துள்ளார். லட்சத்தீவு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், நீதிமன்றம் மூலம் நிவாரணம் பெற்றார். அதேபோல் எனது தகுதி நீக்கத்துக்கும் நீதிமன்றம் தடை விதிக்குமா? என்று  கேட்கிறீர்கள். என்னைப் பொறுத்தவரை,  பதவி கிடைத்தாலும் சரி, கிடைக்கா விட்டாலும் சரி எனது பணியை செய்து கொண்டிருப்பேன்.

இந்தியாவில் ஜனநாயகம் தாக்குத லுக்கு உள்ளாகியுள்ளது. நாடாளுமன் றத்தில் எந்த ஒரு உறுப்பினராலும் அர சுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூற முடியவில்லை. நாடாளுமன்றத்தில் சில  வாரங்களுக்கு முன்பு நான் சில கேள்வி கள் கேட்டேன். அதானிக்குச் சொந்த மான போலி நிறுவனங்களில் 20 ஆயிரம்  கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணம் யாருடையது? யார் முத லீடு செய்தனர்? என்ற கேள்விகளை எழுப்  பினேன். அதானியின் உள்கட்டமைப்பு களில் முதலீடு செய்துள்ளவர்களின் பணம் யாருடையது? என கேட்டேன். ஏனெனில் இந்த போலி நிறுவனங்கள் பாதுகாப்புத்துறைக்கு வேலை செய்  கின்றன. ஆனால், இந்த நிறுவனங்களில் சீன நாட்டினருக்கு பங்கு இருக்கிறது. யார் அந்த சீனர்கள் என்பது குறித்து, ஏன் யாரும் பேச மறுக்கிறார்கள்? மோடிக்கும் அதானிக்கும் என்ன தொடர்பு? என்று கேட்டேன். மோடி வெளி நாடு சென்றபோதெல்லாம் அதானி குழு மத்துக்கு தொழில் ஒப்பந்தங்கள் கிடைத் ததைப் புகைப்பட ஆதாரத்துடன் சுட்டிக்  காட்டினேன். ஆனால், எனது பேச்சு கள் அனைத்தும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன. பின்னர் மக்க ளவை சபாநாயகருக்கு விரிவான பதில்  எழுதினேன். நான் வெளிநாட்டு சக்திகளி டம் உதவி கேட்டதாக சில அமைச்சர்கள் பொய் கூறினார்கள். அதுபற்றி விளக்கம்  அளிக்க முயன்றேன். அதற்கும் அனு மதிக்கவில்லை.

அதானிக்காக விமான நிலையங்க ளின் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்  பட்டது உட்பட ராணுவம், விமானத்துறை தொடர்பான குற்றச்சாட்டுக்களை ஆதா ரத்துடனே முன்வைத்து வருகிறேன். ஆனால்,  ஜனநாயகம் குறித்து பேசும் பாஜக மக்கள வையில் பேச அனுமதிப்பது இல்லை.  நாட்டு மக்களின் ஜனநாயகத்திற்காக நான் போராடிக் கொண்டிருக்கிறேன். தகுதி நீக்கத்தால் எனது குரலை ஒரு போதும் ஒடுக்க முடியாது. நான் கேள்வி கள் கேட்டுக் கொண்டேதான் இருக்கி றேன்.  என் மீதான குற்றச்சாட்டுக்கள் பொய்  யானவை. நாம் ஒரு திருடனைப் பிடித்  தால், அந்தத் திருடன் முதலில் திருட வில்லை என கூறுவார்?. நான் திருட வில்லை என்பார். அதன்பிறகு அங்கே பாருங்கள்.. இங்கே பாருங்கள்.. என  பலரைச் சுட்டிக்காட்டி அவர்கள் தவறு  செய்யவில்லையா? என சொல்வான். இப்படி குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் திசைத் திருப்பவே முயற் சிப்பார்கள். அப்படித்தான் என்மீதும், வெளிநாட்டில் பேசிவிட்டேன்.. ஓபிசி பிரி வினை அவமதித்து விட்டேன் என்றெல் லாம் கூறுகிறார்கள். நான் கேட்பது ஒன்று மட்டுமே. அது  அதானி விவகாரத்தில் ரூ. 20 ஆயிரம்  கோடி எப்படி வந்தது? எங்கிருந்து வந்  தது? அது யாருடைய பணம்? என்பது  மட்டும்தான். மற்றபடி நான் ஓபிசி பிரி வினரை அவமானப்படுத்தியதாகவும், அதற்காக நான் தற்போது தகுதி நீக்கம்  செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுவ தெல்லாம் திசைதிருப்பலே ஆகும்.  அதானி விவகாரத்தில் இருந்து விவா தத்தை திசை திருப்பவே தற்போதைய நாடகம் திட்டமிடப்பட்டுள்ளது. 

என்னைத் தகுதி நீக்கம் செய்வதன் மூலமாகவோ அல்லது சிறையில் அடைப்  பதன் மூலமாகவோ என்னை ஒருபோதும் பயமுறுத்த முடியாது. நான் எனது கொள்கைகளில் இருந்து பின்வாங்கவே மாட்டேன். தகுதி நீக்கத்தைப் பார்த்  தெல்லாம் ஒருபோதும் நான் பயப்பட  மாட்டேன்; எனக்கு எதிராக எடுக்கப்படும்  நடவடிக்கைகள் எதிர்க்கட்சிகளுக்கு சாத கமாகவே இருக்கும். வயநாடு தொகுதி மக்கள் என் குடும்பத்தை போன்றவர் கள். தகுதி நீக்கம் குறித்து அவர்களுக்கு  கடிதம் எழுதுவேன். ஜனநாயகம் குறித்து  பேசியதற்காகவும் அவதூறு வழக்கு  தொடர்பாகவும் மன்னிப்பு கேட்கலாமே என்கிறார்கள். என்னைப் பற்றி இவர்  களுக்கு இன்னும் சரியாகப் புரிய வில்லை. எனது பெயர் சாவர்க்கர் அல்ல,  ராகுல் காந்தி. காந்தி ஒருபோதும் மன் னிப்பு கேட்க மாட்டான். என் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக் காக மக்களிடம் நியாயம் கேட்பேன்; மக்களவையில் நான் அதானி நிறுவன முறைகேடு தொடர்பாக பேசியதால்தான்  இந்த எதிர்வினைகளைச் சந்தித்து வரு கிறேன். மறுபடியும் அதானி நிறுவனம்  தொடர்பாக நான் பேசி விடக்கூடாது என்ப தற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள் ளேன். அதானி குறித்த எனது பேச்சை கண்டு பிரதமர் மோடி பயந்துவிட்டார்; அந்த பயம் அவரது கண்களிலேயே தெரிந்தது; அதன் காரணமாகவே முத லில் திசை திருப்பல்களை செய்தார்கள்.  அடுத்ததாக தகுதிநீக்கம் செய்யப்பட்டி ருக்கிறேன். பதவி நீக்கம் எனக்கு கிடைத்த பரிசுதான். அதைப்பற்றி எனக்கு  கவலை இல்லை. என்னை நிரந்தரமாக தகுதி நீக்கம் செய்தாலும் நான் தொட ர்ந்து பணியாற்றிக் கொண்டுதான் இருப்  பேன். நான் நாடாளுமன்றத்தில் இருக்கி றேனா, இல்லையா என்பது குறித்து கவலையில்லை; என்னை நிரந்தரமாக தகுதிநீக்கம் செய்தாலும் மக்களுக்காக தொடர்ந்து போராடுவேன். எந்த அச்சுறுத்தலுக்கும் பயப்பட மாட்டேன். 

நாட்டின் ஜனநாயகத் தன்மையைப் பாதுகாப்பது, அதாவது நாட்டின் நிறு வனங்களைப் பாதுகாப்பது, நாட்டின்  ஏழை மக்களின் குரலைப் பாதுகாப்பது  மற்றும் பிரதமருடனான உறவைப் பயன்  படுத்திக் கொள்ளும் அதானி போன்ற வர்களைப் பற்றிய உண்மையை மக்க ளுக்குச் சொல்வது எனது வேலை. அர சியல் நீதி என்பது எனது ரத்தத்தில் கலந்துள்ளது.  எனக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சி களுக்கு நன்றி. அவர்களுடன் இணைந்து  பணியாற்றுவேன். மோடி - அதானி உறவு  குறித்து நான் கேள்வி கேட்பதை நிறுத்த  மாட்டேன். தேசத்திற்கு எதிரான சக்தி களைப் போராடி முறியடிப்பேன். என் மீது  எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக மக்களிடம் நியாயம் கேட்பேன். என் மீது வன்முறையை கட்டவிழ்த்தாலும்.. சிறையில் அடைத்தாலும்.. அஞ்ச மாட்டேன்.  இவ்வாறு ராகுல் காந்தி கூறி யுள்ளார்.

 

;