மணிப்பூரில் மருத்துவமனை சூறை
வன்முறை பூமியாக காட்சி அளித்து வரும் மணிப்பூர் மாநி லத்தின் தலைநகர் இம்பாலில் உள்ள ரிம்ஸ் மருத் துவமனையில் 30 மணி நேர இடை வெளியில் அடுத்த டுத்து 2 நோயாளிகள் மர்மமான முறையில் உயிரிழந்தனர். யம் பேம் சஞ்சோய் (50) என்பவர் சனிக் கிழமை அன்று மாலையிலும், மஞ்சு (35) என்ற பெண் அறுவை சிகிச்சைக்குப் பின் ஞாயிறன்று காலையிலும் உயிரிழந்தனர். மருத்துவர்களின் அலட்சியம் காரண மாகவே இருவரும் இறந்ததாக அவர்க ளது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். குறிப்பாக மஞ்சுவின் மரணத்தைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த அவரது உற வினர்கள் மற்றும் உள்ளூர் மக்கள், ஞாயி றன்று மருத்துவமனைக்குள் புகுந்து, மருத்துவமனையின் சொத்துக்களை சேதப்படுத்தியதுடன், மருத்துவர் பிரிட்டம் குமார் உள்ளிட்ட பணியா ளர்களை கடுமையாகத் தாக்கினர். இதில் படுகாயமடைந்த மருத்துவர் உள்ளிட்டோர், அதே மருத்துவமனை யின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக் கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ரிம்ஸ் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை மற்றும் வழக்கமான அறுவை சிகிச்சை கள் உள்ளிட்ட அனைத்து சேவைகளை யும் உடனடியாக நிறுத்துவதாக அறிவிக் கப்பட்டுள்ளது.