வரலாற்றாசிரியர் ராமசந்திர குஹா
பேராசிரியர் பிரான்செஸ்கா ஓர்சினி இந்திய இலக்கியத்தின் சிறந்த அறிஞர் ஆவார். அவரது படைப்புகள் நமது சொந்த கலாச்சார பாரம்பரியத்தைப் பற்றிய புரிதலை வளமாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. ஆனால் காரணமின்றி அவரை நாடு கடத்துவது பாதுகாப்பற்ற, மோசமான ஒரு அரசாங்கத்தின் அடையாளமாகும்.
உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன்
கர்நாடகாவில் ஒரு வாக்காளரை நீக்க தலா ரூ.80 பெற்று போலி படிவங்களை பதிவேற்றி கணினி மையம் செயல்பட்டது அம்பலமாகி உள்ளது. வாக்குத் திருட்டு நிதானமாக திட்டமிடப்பட்டு, பணம் செலுத்தப்பட்டு நடத்தப்பட்டிருக்கும் மோசடி என தெளிவாகி இருக்கிறது. தேர்தல் ஆணையமும் இந்த திட்டத்தில் உடந்தை என்பதை மறந்துவிடக் கூடாது.
திரிணாமுல் எம்.பி., சாகேத் கோகலே
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) நடவடிக்கைக்கு எதிரான மனுக்கள் இன்னும் உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கின்றன. விசாரணை முடிவதற்கு முன்பே தேர்தல் ஆணையம் இன்னும் 10 மாநிலங்களில் எஸ்ஐஆர் நடவடிக்கை நடத்தப்படும் என அறிவித்திருக்கிறது. இது நீதிமன்ற அவமதிப்பு.
நாவலாசிரியர் முகுல் கேசவன்
அறிஞர்கள் மீது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கொண்டுள்ள உள்ளார்ந்த விரோதப் போக்கு கவனிக்கத்தக்கது. இந்தி மீது சித்தாந்த ரீதியாக அர்ப்பணிப்புடன் செயல்படும் அரசு (மோடி அரசு) பேராசிரியர் பிரான்செஸ்கா ஓர்சினியை இந்தியாவிற்குள் நுழைய விடாமல் தடுத்துள்ளது. இதை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.
