கொலை வழக்கில் இந்து மகாசபை பெண் தலைவர் கைது
கூலிப்படையை இயக்கியது அம்பலமானது
லக்னோ பாஜக ஆளும் உத்தரப்பிர தேச மாநிலம் ஹாத்ர ஸில் இருசக்கர வாகன விற்பனை மையத்தை நடத்தி வரு பவர் அபிஷேக் குப்தா. இவர் வெள் ளிக்கிழமை பேருந்தில் பயணித்த போது மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான காவல்துறை விசார ணையில் “இந்து மகாசபா” என்ற தீவிர இந்துத்துவா அமைப்பின் தலைவி பூஜா ஷகுன் பாண்டே தனது கணவர் மற்றும் அசோக் பாண்டா, பூஜா வீட்டில் வெகு கால மாக வேலை பார்த்த முகமது பைசல், ஆசிப் என்ற கூலிப்படை யினர் மூலம் அபிஷேக் குப்தாவை கொலை செய்தது தெரியவந்தது. முகமது பைசல், ஆசிப், பூஜாவின் கணவர் ஆகியோரை காவல்துறை யினர் கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த பூஜாவை ராஜஸ்தானில் ஆக்ரா - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் காவல்துறை யினர் விரட்டிப் பிடித்து கைது செய்த னர். காந்தி புகைப்படத்தை சுட்டவர் கொலை வழக்கில் கைது செய் யப்பட்ட பூஜா ஷகுன் பாண்டே தனியாக கூலிப்படை வைத்து இருப்பவர். முஸ்லிம் மற்றும் தலித் மக்களை மிரட்டி பணம் பறிக்கும் வேலைகளை அதிகமாக செய்ப வர். சில ஆண்டுகளுக்கு முன்னர் கோட்சேவிற்கு ஆதரவாக மகாத்மா காந்தி கொலையை நடித்துக் காட்டும் விதமாக அவரது உருவப்படத்தை நோக்கி துப் பாக்கிச் சூடு நடத்தி சர்ச்சையை ஏற்படுத்தியவர். மேலும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் வெறுப்புப் பேச்சின் மூலம் சில வன்முறைக்கு காரணமானவர் ஆவர்.
