states

img

ஹரியானா அரசுக் கணக்கில் ரூ.590 கோடி கையாடல்

ஹரியானா அரசுக் கணக்கில் ரூ.590 கோடி கையாடல்

வெளிநபர்களுக்கும் தொடர்பு ; ஐடிஎப்சி நிர்வாக இயக்குனர் தகவல்

மும்பை நாட்டின் முக்கிய தனியார் வங்கிகளில் ஒன்று ஐடிஎப்சி ஆகும். மகா ராஷ்டிரா மாநிலம் மும்பையை தலை யிடமாகக் கொண்டு செயல்படுகிறது.  இந்த வங்கியின் சண்டிகர் கிளையில் பணி யாற்றும் சில அதிகாரிகள், பாஜக ஆளும் ஹரியானா அரசாங்கக் கணக்குகளில் இருந்து ரூ.590 கோடியை கையாடல் செய்துள்ளனர். இதுதொடர்பாக நான்கு அதிகாரிகளை ஐடிஎப்சி வங்கி சஸ்பெண்ட் செய்துள்ளது. இந்நிலையில், ஹரியானா அரசு கணக்கு கள் தொடர்பான ரூ.590 கோடி மோசடியில் ஊழியர்களுக்கும், வெளிநபர்களுக்கும் ரகசிய கூட்டணி இருக்கிறது என ஐடிஎப்சி நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியு மான வி.வைத்தியநாதன் திங்களன்று தெரி வித்தார்.  இதுதொடர்பாக அவர் மேலும் கூறு கையில்,“இந்த மோசடியின் பாதிப்பைக் கையாள வங்கி குறிப்பிட்ட அளவு நிதி ஒதுக்கீடுகளைச் செய்யும். கேபிஎம்ஜி ஆலோ சனை நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் தணிக்கை இன்னும் 4 முதல் 5 வாரங்களில் முடிவடையும். அதன்பின்னர் இறுதி நடவ டிக்கை எடுக்கப்படும்” என அவர் கூறினார். முன்னதாக, ஹரியானா அரசுத் துறையிட மிருந்து ஐடிஎப்சி வங்கியின் கணக்கை மூடி விட்டு வேறு வங்கிக்கு நிதியை மாற்றக் கோரி யுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐடிஎப்சி விவகாரத்தை கண்காணித்து வருகிறோம் : ரிசர்வ் வங்கி

ஒன்றிய பட்ஜெட்டுக்குப் பிந்தைய வழக்கமான கூட்டத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) மத்திய இயக்குநர்கள் பங்கேற்றனர். திங்களன்று நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு பின்பு,  ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறுகையில்,”சண்டிகர் கிளையில் உள்ள ஹரியானா அரசுடன் தொடர்புடைய குறிப்பிட்ட கணக்குகளுக்குள் மட்டுமே கையாடல் செய்யப்பட்டுள்ளது. அந்த கிளையின் மற்ற வாடிக்கையாளர்களுக்கு இதில் எந்த பாதிப்பும் இல்லை என ஐடிஎப்சி வங்கி விளக்கம் அளித்துள்ளது. எனினும்,  நாங்கள் இந்த விவகாரத்தைக் கண்காணித்து வருகிறோம்; இது வங்கித் துறையை ஒட்டுமொத்தமாகப் பாதிக்கும் ஒரு சிக்கல் அல்ல” என அவர் கூறினார்.