ஜார்க்கண்டில் கனமழை 5 பேர் பலி
நாட்டில் பருவமழை தீவிரம டைந்து வருகிறது. கடந்த ஒரு வார காலமாக மகாராஷ்டிரா, தில்லி, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநி லத்திலும் கடந்த 3 நாட்களாக இடை விடாது கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழையால் பல்வேறு பகுதிக ளில் இயல்பு வாழ்க்கை கடுமையாக முடங்கியுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் கனமழையால் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 5 வயது குழந்தை உட்பட 5 பேர் பலியாகியுள்ளனர். 30க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உத்தரகண்ட் உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளிக் கிழமை அன்று நள்ளிரவு முதல் பெய்து வரும் கனமழையால் சமோலி, தாராலி, சாக்வாரா நகரம் வெள்ளக்காடாய் காட்சி அளித்தன. சாக்வாரா பகுதியில் வெள்ளத்தில் சிக்கி 2 பேர் காணாமல் போ யுள்ளனர். அதே போல தாராலி முழு வதும் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட இடிபாடுகள் மற்றும் வாகனங்கள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இமாச்சலில் 339 முக்கிய சாலைகள் மூடல் இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் மஞ்சள் எச்சரிக்கையுடன் கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து அம்மாநிலத்தில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை உள்பட 339 முக்கிய சாலை கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக மண்டி மாவட்டத்தில் 162 சாலைகளும், குலுவில் 106 சாலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும், தேசிய நெடுஞ்சாலை 305-ம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.