குஜராத் பால விபத்து பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு
குஜராத் மாநிலத்தின் வதோதரா மாவட்டத்தில் உள்ள முஜ்பூ ரையும் ஆனந்த் மாவட்டத்தில் இருக்கும் கம்பீரா என்ற இடத்தையும் இணைக்கும் வகையில் மஹிசாகர் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் ஒன்று உள்ளது. 24 ஆண்டுகளாக குஜராத்தை ஆளும் அம்மாநில பாஜக அரசு சரியாக பராமரிக்காததால் புதன்கிழமை அன்று காலை பாலம் திடீரென இடிந்து விழுந்தது. பாலம் இடிந்து விழுந்த சமயம், பாலத்தில் பயணித்த 2 லாரிகள், 2 வேன் கள், ஒரு ஆட்டோ, ஒரு இருசக்கர வாகனம் என 6 வாகனங்கள் ஆற்றுக் குள் விழுந்தன. வாகனத்தில் இருந்த வர்கள் ஆற்றில் விழுந்து உதவி கேட்டு கூச்சலிட்டனர். புதன்கிழமை இரவு நில வரப்படி பால விபத்தில் 11 பேர் உயி ரிழந்தனர். சிலர் மாயமாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. சம்பவ இடத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படை (என்டிஆர்எப்) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (எஸ்டிஆர்எப்) குழுக்கள் ஆற்றின் கீழ்ப்பகுதியில் 4 கி.மீ., வரை மாயமானவர்களின் உடல்களைத் தேடும் பணியை தொடங்கின. இந்நிலையில், வியாழக்கிழமை அன்று மேலும் 4 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இதன்மூலம் பலி எண்ணி க்கை 16ஆக உயர்ந்துள்ளது. மாயமான மூவரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காணாமல் போன நபர்கள் குறித்து கட்டுப்பாட்டு அறையை அழைத்துத் தெரிவிக்கலாம் என மீட்பு குழு அறிவித்துள்ளது. ஆற்று நீரை குறைக்காதது ஏன்? மஹிசாகர் ஆறு மத்தியப் பிரதே சத்தில் உற்பத்தியாகி, ராஜஸ்தான் மாநி லத்தின் வாகட் பகுதி வழியாகப் பாய்ந்து, குஜராத் வழியாக அரபுக் கடலில் கலக்கி றது. பொதுவாக ஒரு ஆற்றில் பொது மக்கள் விழுந்து அல்லது வாகனம் விழுந்து கடுமையான விபத்து ஏதும் ஏற்பட்டால் சம்மந்தப்பட்ட ஆற்றின் அணையில் தண்ணீர் குறைக்கப்படும். நீர் வரத்து குறைந்த பின் மீட்புப் பணி சுமூகமாக நடைபெறும். ஆனால் மிக மோசமான அளவில் விபத்து ஏற்பட்டும் மஹிசாகர் அணையில் இன்னும் திறந்து விடப்படும் நீர் குறைக்கப்படவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.