எல்இடி விளக்குகள், கிரைண்டர்களுக்கு ஜிஎஸ்டி 18 சதவிகிதமாக அதிகரிப்பு!
புதுதில்லி, ஜூன் 29 - கிரைண்டர், அரிசி ஆலை இயந்திரங்களுக்கான வரியை 5 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாக உயர்த்த ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது. அஞ்சலக சேவைகளுக்கு வழங்கப் பட்டு வந்த ஜிஎஸ்டி வரி விலக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இனி அஞ்சல் சேவைகளுக்கும் ஜிஎஸ்டி வசூ லிக்கப்படவுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலின் 47-ஆவது கூட்டம், சண்டிகரில் ஒன்றிய நிதி யமைச்சா் நிர்மலா சீதாராமன் தலைமை யில் இரண்டு அமர்வுகளாக நடை பெற்றது. இதில், இரண்டாவது நாளான புத னன்று, பல்வேறு சில்லறை விற்பனை பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரி உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதன்படி எல்இடி விளக்குகளுக்கு ஜிஎஸ்டி வரி 12 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகவும், சூரிய சக்தியில் இயங்கும் ஹீட்டர்களுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகித மாகவும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதேபோல பதப்படுத்தப்பட்ட தோல்களுக்கான ஜிஎஸ்டி 5 சத விகிதத்திலிருந்து 12 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
பேனா, மை, கத்தி, பிளேடு, ஸ்பூன் களுக்கும் ஜிஎஸ்டி வரியும் 12 சத விகிதத்திலிருந்து 18 சதவிகிதமாக அதி கரிக்கப்பட்டு உள்ளது. அரிசி ஆலை இயந்திரங்களுக்கான வரி 5 சத விகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. சாலைகள், பாலங்கள், ரயில்வே, மெட்ரோ, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலை யம் உள்ளிட்ட ஒப்பந்த பணிகளுக் கான ஜிஎஸ்டி-யும் 12 சதவிகிதத்தி லிருந்து 18 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. ரூ. 1000-க்கும் குறைவான உணவக அறை வாடகைக்கு இனி 12 சத விகித ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளது. அஞ்சலக சேவைகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஜிஎஸ்டி வரி விலக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன் படி இனி அஞ்சல் சேவைகளுக்கும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படவுள்ளது. மோட்டார் பம்புகள், பால் பண்ணை இயந்திரங்களுக்கான வரி 12 சதவிகி தத்திலிருந்து 18 சதவிகிதமாக அதி கரிக்கப்பட்டுள்ளது. வணிக பெயரில் (பிராண்ட்) அல்லாத பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களுக்கும் ஜிஎஸ்டி 5 சத விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதா வது, இறைச்சி, மீன், தயிர் மற்றும் பனீர் போன்ற முன் பேக் செய்யப்பட்ட மற்றும் லேபிளிடப்பட்ட உணவுப் பொருட்கள், அரிசி, கோதுமை போன்ற பேக் செய்யப்படாத உணவுப் பொருட் களுக்கு இனி 5 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்.