பனாஜி, டிச.29- “பாஜக வணிகமயமாகி விட்டது; இனிமேலும் அது வித்தியாசமான கட்சி என கூறிக்கொள்ள முடியாது” என்று மைக்கேல் லோபோ என்ற கோவா-வைச் சேர்ந்த அந்தக் கட்சியின் அமைச்சரே விமர்சித்துள்ளார். “பாஜக ஒரு வித்தியாசமான கட்சி யாக அறியப்பட்டது. ஆனால், தற்போது அது தன்னுடைய அசல் தன்மையை இழந்து விட்டது. கோவாவில் உள்ள பாரதிய ஜனதா கட்சி, இனி வித்தி யாசமான கட்சி என்று கூறிக்கொள்ள முடியாது. கட்சித் தொண்டர்களுக்கு இப்போது எந்த முக்கியத்துவமும் பாஜகவில் இல்லை. கட்சிக்குள் கோஷ்டிகள் உள்ளன. கட்சி இன்று வணிகமயமாகி விட்டது.
பாஜக ஒரு உணவகம் போன்றது. முன்பு அது ருசியான உணவை வழங்கு வதில் பிரபலமடைந்தது. ஆனால் விரைவிலேயே நூற்றுக்கணக்கான விருந்தினர்களுக்கு உணவளிக்கத் தொடங்கும்போது உணவு அதன் சுவை யை இழந்து விட்டது” என்று லோபோ கூறியுள்ளார். லோபோவின் இந்தப் பேச்சு கோவா பாஜகவினரை கலக்கமடைய வைத் துள்ளது. லோபோ 2012 முதல், 10 ஆண்டு களாக ‘கலங்குட்’ சட்டமன்றத் தொகுதி பாஜக எம்எல்ஏவாக உள்ளார். இந்நிலை யில், 2022-இல் நடக்கவிருக்கும் தேர்த லில் பாஜக அவருக்கு வாய்ப்பளிக்க மறுத்து விட்டதாக தெரிகிறது. இதை யடுத்தே அவர் பாஜக-வை விமர்சித் துள்ளார். “உயர் பதவியில் உள்ள சிலர், எனக்குப் போட்டியிட வாய்ப்புத் தர விரும்பவில்லை. அவர்கள் என் நிழ லைக் கண்டு அஞ்சுகிறார்கள்” என்று இதற்கு முன்பும் லோபோ பகிரங்கமா கவே குற்றம் சாட்டினார் என்பது குறிப்பி டத்தக்கது.