states

img

எரிவாயு சிலிண்டர் மானியம் எல்லோருக்கும் இல்லை!

புதுதில்லி, மே 23- இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தொடங்கி சமையல்  எண்ணெய், கோதுமை மாவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வரையி லான விலை உயர்வு, சாமானிய மக்க ளின் பட்ஜெட்டை பதம்பார்த்துள்ளது.  இவை ஒருபுறமிருக்க வீட்டு வாடகை உயர்வு, கடன்களுக்கான வட்டி விகித உயர்வு உள்ளிட்டவற்றாலும் ஏழை மக் கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச சூழலே இந்தப் பிரச்சனைகளுக்குக் காரணம் என விளக்கமளித்து வந்த ஒன்  றிய அரசு, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைக்கப்படுவதாகவும், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானி யம் வழங்கப்படவுள்ளதாகவும் அறிவித்  துள்ளது.  ஒன்றிய அரசின் அறிவிப்பினால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.50-யும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7-யும் குறைந்துள்ளது. ஒன்றிய அரசைத் தொடர்ந்து மாநில அரசுகளும் பெட் ரால், டீசல் மீது விதித்து வரும் மதிப்புக்  கூட்டு வரியை சற்று குறைக்கும் என  எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரண மாக எரிபொருள் மீதான விலை மேலும் குறைய வாய்ப்புண்டு எனக் கூறப்படு கிறது. 

மானியம் பெற தகுதி...

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படவுள்ளதாக அறி வித்துள்ள ஒன்றிய அரசு, அதைப் பெற  சில நிபந்தனைகளையும் விதித்துள் ளது. நாட்டில் சுமார் 30 கோடி பேர் சமை யல் எரிவாயு இணைப்பைப் பெற்றுள்ள னர். அவர்கள் அனைவருக்கும் மானி யம் கிடைக்கப் போவதில்லை. மாறாக, ஒன்றிய அரசு செயல்படுத்தி வரும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இணைப்பு பெற்றுள்ள 9 கோடி பய னாளர்களுக்கு மட்டுமே ஒவ்வொரு சமையல் எரிவாயு சிலிண்டருக்கும் ரூ.200 மானியம் வழங்கப்படவுள்ளது. இதனால், அவர்களுக்கு எரிவாயு சிலிண்டரின் விலை சுமார் ரூ.800-ஆக இருக்கும். அவர்களுக்கு மானியம் வழங்குவதன் மூலமாக சுமார் ரூ.6,100 கோடி கூடுதலாக செலவாகும் என ஒன்  றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.  மற்ற 21 கோடி பேருக்கும் சமையல்  எரிவாயு சிலிண்டருக்காக எந்தவித மானியமும் கிடைக்கப் போவதில்லை. உஜ்வாலா திட்டப் பயனாளர்களும் மானிய விலையில் சிலிண்டரைப் பெறு வதில் நிபந்தனை உள்ளது. ஆண்டுக்கு  அவர்கள் பெறும் 12 சிலிண்டர்களுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படவுள் ளது. அதற்கு அதிகமாக வாங்கும் சிலிண் டர்களுக்கு மானியம் கிடைக்காது. மானி யத் தொகையானது பயனாளர்களின் வங்கிக் கணக்குக்கே நேரடியாகச் செலுத்தப்படவுள்ளது.  விறகு, மண்ணெண்ணெய் ஆகிய வற்றை எரிபொருளாகப் பயன்படுத்துவ தால் பெண்களின் உடல்நலமும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டு வந்தது. இதைத் தடுக்கும் நோக்கில் உஜ்வாலா திட்டத்தைக் 2016-ஆம் ஆண்டில் ஒன் றிய அரசு அறிமுகப்படுத்தியது. 

சிலிண்டர் வாங்க முடியாத நிலை...

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அண்மையில் பெறப்பட்ட தகவலின்  படி, 2021-22-ஆம் நிதியாண்டில் சுமார்  90 லட்சம் உஜ்வாலா திட்டப் பயனா ளர்கள் 2-ஆவது சமையல் எரிவாயு சிலிண்டரைப் பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. 1 கோடிக்கும் மேற்  பட்ட பயனாளர்கள் 2-ஆவது முறை மட்டுமே சிலிண்டரைப் பெற்றுள்ளனர். அதற்கு அதிகமாக சிலிண்டரை அவர்கள் பெறவில்லை. இதன் மூல மாக, உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்  கப்படும் முதலாவது சிலிண்டர் காலி யாகிவிட்டால், அடுத்த சிலிண்டரை விலைகொடுத்து வாங்க முடியாத பொருளாதார சிக்கலில் பல குடும்பங் கள் தவித்து வருவது தெரிகிறது. இத்தகைய பிரச்சனைகளைப் போக்குவதற்கு, சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை ஒன்றிய அரசு அதிகரித்து வழங்க வேண்டும்  என நிபுணர்கள் கோரிக்கை விடுக்கின்  றனர். மேலும், தற்போது அறிவிக்கப் பட்டுள்ள ரூ.200 மானியத்தை நடுத்தர  குடும்பத்தினருக்கும் வழங்க வேண்டு மெனவும் கோரிக்கைகள் எழுந்துள் ளன.  நாட்டில் நடுத்தர குடும்பங்களே அதிகமாக உள்ள நிலையில், அவர்  களுக்குத் திட்டங்களின் பலன்கள் கிடைக்காவிட்டால், பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுப்பது கடினமே என்று பொரு ளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.