states

ஆந்திராவில் சரக்கு ரயில் தடம் புரண்டது

ஆந்திராவில் சரக்கு ரயில் தடம் புரண்டது

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே கோத்தவலசா - கிரண்  டுல் ரயில் பாதையின், தியாடா  மற்றும் சிமிடிபள்ளி ரயில் நிலையங்க ளுக்கு இடையே ஞாயிறன்று அதி காலை 4 மணியளவில் விசாகப்பட்டினம்  செல்லும் சரக்கு ரயில் பச்சேலியில் இருந்து வந்து கொண்டிருந்தபோது தடம்  புரண்டது. இந்த சம்பவத்தில் என்ஜினின் இரண்டு அச்சுகள் தடம்புரண்டதால் விபத்து ஏற்பட்டதாகவும், தண்ட வாளத்தில் பாறை உருண்டு விழுந்ததன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டது என கிழக்கு கடற்கரை ரயில்வே அதிகாரி கள் தெரிவித்தனர். ரயில் தடம் புரண்ட சம்பவத்தால் விசாகப்பட்டினம் - கிரண் டுல் இடையே பயணிகள் ரயில் இருபுற மும் ரத்து செய்யப்பட்டுள்ளது.