states

img

ஜம்மு- காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்

ஜம்மு- காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்

ஜம்மு- காஷ்மீர் முன்னாள் ஆளுநர்  சத்யபால் மாலிக் (வயது 79)  உடல்நலக் குறைவால் செவ்  வாய்க்கிழமை அன்று காலமானார். சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைக்காக கடந்த சில மாதங்களாக தில்லி ராம்  மனோகர் லோஹியா மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்த சத்யபால் மாலிக், செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணியளவில் உயிரிழந்ததாக அவரது தனிச்செயலாளர் தெரிவித்துள்ளார்.  1960 ஆம் ஆண்டில் மாணவர் சங்கத் தலைவராக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய சத்யபால் மாலிக், பாரதிய  கிராந்தி தளம், காங்கிரஸ் மற்றும் வி.பி.  சிங் தலைமையிலான ஜனதா தளம்  உள்ளிட்ட கட்சிகளில் பணிபுரிந்துள்ளார். பின்னர் 2004ஆம் ஆண்டில் பாஜகவில் இணைந்தார். உத்தரப்பிரதேசத்தின் பாக்பத் சட்ட மன்ற உறுப்பினராக 1974ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். 1980, 1986 ஆம்  ஆண்டுகளில் மாநிலங்களவை உறுப்பி னராகவும் பதவி வகித்துள்ளார். 2017ஆம்  ஆண்டு பீகார் ஆளுநராக பதவி வகித் தார். அதன்பின்னர் 2018 முதல் 2019 வரை  ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக இவர் பதவி  வகித்த காலத்தில்தான், சிறப்பு அந்தஸ்து  ரத்து செய்யப்பட்டது.