நவம்பர்-டிசம்பர் மாதங்களில் கேரள உள்ளாட்சித் தேர்தல்கள்
கேரளத்தில் உள்ளாட்சி அமைப்பு களுக்கான தேர்தல்கள் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் ஏ.ஷாஜகான் அறிவித்துள் ளார். தேர்தல் செயல்முறை டிசம்பர் 20 ஆம் தேதிக்கு முன் முடிக்கப்படும் என வும் இதற்கான ஏற்பாடுகள் முடிக்கப் பட்டுள்ளதாகவும், தேர்தலுக்கு முன்பு வாக்காளர் பட்டியல் மீண்டும் புதுப்பிக் கப்படும் என்றும் அவர் தெரிவித்துள் ளார். உள்ளாட்சித் தேர்தலை முற்றிலும் பசுமையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போது சுற்றுச் சூழல் மாசுபாடு மற்றும் ஒலி மாசுபாட் டைத் தடுப்பதற்கான பரிந்துரைகளை பொதுமக்கள் அக்டோபர் 10 ஆம் தேதிக்கு முன் cru.sec@kerala.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், மாநில தேர்தல் ஆணையம், ஜனஹிதம், விகாஸ் பவன் அஞ்சல், திருவனந்தபுரம் என்ற முகவரிக்கும் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.