வெளிநாட்டு விமானங்களை இயக்கு வதற்காக இந்திய நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் விமான எரிபொருளுக்குக் கலால் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படு வதாக ஒன்றிய நிதியமைச்சகம் தெரிவித்துள் ளது. விமான எரிபொருள் மீதான ஏற்றுமதிக்கு லிட்டருக்கு ரூ. 6 கலால் வரி விதிக்கப்படுவதாக ஒன்றிய அரசு கடந்த 1-ஆம் தேதி அறிவித்தது. இந்த வரியானது, வெளிநாட்டு விமா னங்களை இயக்கும் இந்திய விமான நிறுவனங்களுக்குப் பொருந்துமா? எனக் கேள்விகள் எழுந்தன. இந்நிலையில், வெளிநாட்டு வழித்தடங்களில் விமானங்களை இயக்குவதற்காக இந்திய நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் விமான எரிபொருளுக்குக் கலால் வரி விதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.