பாஜக பின்னணியில் தேர்தல் ஆணையம்
வாக்கு திருட்டு பின்னனியில் தேர்தல் ஆணையம் உள்ளது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறு கையில்,”பாஜகவின் வாக்கு திருட்டு பின்னனியில் தேர்தல் ஆணையம் உள்ளதா? சில விஷயங்களை நாம் வரி சைப்படுத்தி பார்க்க வேண்டி உள்ளது. கடந்த 2023இல் கர்நாடக மாநில தேர்த லில் வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதியான வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டு இருப்பதை ஆலந்த் தொகு தியில் கண்டறியப்பட்டுள்ளது. நுட்ப மான நடவடிக்கை மூலம் ஆயிரக்க ணக்கான வாக்காளர்களின் உரிமை பறிக்கப்பட்டது. வாக்காளர் மோசடி விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவா னதில் சுமார் 5,994 விண்ணப்பங்கள் போலியானவை என தெரியவந்தது. குற்றவாளிகளை பிடிக்க அம்மாநில காங்கிரஸ் அரசு சிஐடி விசாரணையை முன்னெடுத்தது. வாக்கு திருட்டு மோ சடியில் ஈடுபடுபவர்களை பாதுகாக்கும் வகையில் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. வாக்கு திருட்டை திடீரென தடுக்க வேண்டிய காரணம் என்ன? யாரை காக்க பார்க்கிறது பாஜக வின் வாக்கு திருட்டு துறை. தனிநபரின் வாக்குரிமை பாதுகாக்கப்பட வேண்டும். இந்திய ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும்” என அவர் கூறினார்.