states

img

மருமகளுக்கு ரூ.1 கோடி இழப்பீடு தர பாஜக தலைவருக்கு உத்தரவு!

விஜயவாடா, ஜன.20- குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட மருமகளுக்கு ரூ. 1 கோடி இழப்பீடு தருமாறு ஆந்திர மாநில பாஜக முன் னாள் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கன்னா லட்சுமி நாராயணாவுக்கு நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. கன்னா லட்சுமி நாராய ணாவின் மகன் கன்னா நாக ராஜூவுக்கும், லட்சுமி கீர்த்தி என்பவருக்கும் கடந்த 2006- ஆம் ஆண்டு மே மாதம் காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2013-ஆம் ஆண்டு பெண் குழந்தை ஒன்றும் பிறந் துள்ளது. இந்நிலையில், மரு மகள் லட்சுமி கீர்த்தியை, கண வர் கன்னா நாகராஜ், மாமனார் கன்னா லட்சுமி நாராயணா, மாமியார் கன்னா விஜய லட்சுமி என குடும்பமே சேர்ந்து சித்ரவதை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக மருமகள் ஸ்ரீலட்சுமி கீர்த்தி, கணவர் குடும்பத்தினர் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த விஜயவாடா முதன்மை கூடுதல் தலைமை நீதிமன்ற நீதிபதி, குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட லட்சுமி கீர்த்திக்கு, கன்னா லட்சுமி நாராயணா, அவரது மனைவி மற்றும் மகன் ஆகி யோர் ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்த ரவிட்டுள்ளார். குடும்ப வன்முறையால் காயமடைந்த கீர்த்தி மற்றும் அவரது குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்காக ரூ. 50 ஆயிரம், இவர்கள் தங்கு வதற்கு வீட்டுவசதி அல்லது மாதந்தோறும் ரூ. 50 ஆயிரம் பணமும் வழங்க வேண்டும் என்றும் கூறியிருக்கும் நீதி பதி, ஸ்ரீலட்சுமி கீர்த்திக்கு காவல்துறை பாதுகாப்பு  வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.