பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு
பஷ்யல்ராம் வெடி விபத்து
தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தின் பஷ்யல்ராம் பகுதியில் மருந்து தயாரிக்கும் ரசாயன தொழிற்சாலையில் ஜூன் 30 அன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சிக்கி 12 தொழி லாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்த நிலையில், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் 50 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்ப தாக செய்திகள் வெளியாகின. ஜூலை 2ஆம் தேதி நிலவரப்படி பலி எண்ணிக்கை 42 ஆக உயர்ந்தது. இந்நிலையில், தொடர்ந்து செவ் வாய்க்கிழமை அன்று வெடிவிபத்தில் சிக்கி, சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 தொ ழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 44 ஆக அதிகரித்து உள்ளது. பஷ்யல்ராம் வெடிவிபத்தில் இறந்த வர்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என ரசாயன தொழிற் சாலை நிறுவனமான சிக்காச்சி ஏற்கெனவே அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.