states

பால் பொருள்கள் மீதான வரி உயர்வுக்கு பால் கூட்டுறவு சங்கங்கள் கண்டனம்

புதுதில்லி,  ஜுலை 4 பால் பொருள்களின் மீது ஜிஎஸ்டி வரியை அதிகரிப்பதால் பால் பொருட் களின் விலை கடுமையாக உயரும் என கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தெரி வித்துள்ளனர். சண்டிகரில்  47 ஆவது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் கடந்த வாரம் நடை பெற்றது. முன்கூட்டியே உறையிடப் பட்ட பால், தயிர், லஸ்ஸி, மோர் போன்ற பால் பொருட்களுக்கு 5 சதவீதமும்  ஜிஎஸ்டி , பால் கறக்கும் இயந்திரங்கள் மற்றும் பால் பொருட்கள் தயாரிக்கும் இயந்திரங்களுக்கு 12 சதவீதத்தில் இருந்து  முதல் 18 சதவீதம் மீதான ஜிஎஸ்டியை அதிகரிப்பதாக கூட்டத் தில்  முடிவு  செய்யப்பட்டது. இவ்வாறு ஜி.எஸ்.டி வரிகளை உயர்த்துவதன் மூலம் பால் பொருள்களின் விலை கடுமையாக உயர்வதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்திருக்கின்றனர். இந்த ஜிஎஸ்டி வரி உயர்வை விவ சாய அமைப்புகள் மற்றும் பால் கூட்டு றவு சங்கங்கள்  கடுமையாக  விமர்சிப்ப தோடு.   ஒன்றிய  அரசு  தொழிலாளர் மற்றும் விவசாயிகள் நலன் கருதி வரி உயர்வை கை விட வேண்டும் என பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் வலி யுறுத்துகின்றனர்.

பால் இயந்திரங்கள் மற்றும் பால் கறக்கும் இயந்திரங்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டால் பால் மற்றும் தயிர் போன்ற பொருள்களின் விலை அதிக அளவு உயர்த்தப்படும் என்றும் வரி உயர்வு செய்தி அறிக்கையில் வெளியி டப்பட்டதால் அது குறித்த எந்தவித தெளிவும் இல்லை. அதனால் ஒன்றிய அரசின் தகவலுக்காக காத்திருக்கி றோம் என்று குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு நிர்வாக இயக் குனர் ஆர்.எஸ்.சோதி கூறுகிறார். உத்தரப்பிரதேச மாநிலம் நாட்டி லேயே பால்  உற்பத்தியில்  முதல் மாநி லமாக இருக்கிறது. பிரதேச கூட்டுறவு பால் பண்ணை கூட்டமைப்புகள் விரை வில் சந்தித்து ஜி.எஸ்.டி தாக்கம் குறித்து மதிப்பீடு செய்வதாக தெரிவித்து இருக்கின்றனர். பொருள்களின் மீதான விலை உயர்வால் நுகர்வோர்களான ஏழை எளிய மக்களையே கடுமையாக பாதிக்கும். அதனால் வரிகளின் தாக் கங்கள் குறித்து மதிப்பீடு செய்து மாநி லத்தின் அனைத்து விவசாயிகளிடம் கலந்தாலோசித்து ஒன்றிய அரசை நாடுவோம் என்று அதன் நிறுவனர் தபேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். 

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் உத்தரப்பிரதேச மாநில தலைவர் சிங். தயிர், மோர் வீடுகளில் தயாரித்து அன்றாடம் வீடுகளில் விற் பனை செய்பவர்கள் அதிகமாக இருக்கின்றனர். இந்த வரிகளால் அவர்களுடைய வாழ்வாதாரம் நேரடி யாகப் பாதிக்கப்படும் என்றும் தெரி வித்தார்.  வரிகள் உயர்த்தப்படுவதால் உள் ளீட்டுச் செலவுகளையும் உயர்த்து கிறது. இதனால் அரசாங்கம் மக்களினு டைய ஊட்டச்சத்து தேவைகள் குறித்து சிந்திக்க வேண்டும் என்று விவசா யிகள் சங்கத் தலைவர் ஹடா ஜிதேந்தர் சிங் தெரிவித்தார். இது குறித்து விவசாய சங்கத் தலை வர் ஹன்னன் முல்லா மற்றும் அசோக் தாவ்லே வெளியிட்டுள்ள அறிக்கையில், பால் பொருள்களின் மீதான விலை யேற்றம் பால் உற்பத்தியையே வாழ்வா தாரமாகக் கொண்டு வாழ்கிற ஏறக் குறைய 9 கோடி மக்களின் வாழ்வாதா ரம் பாதிக்கப்படுவதோடு மட்டுமில்லா மல் மில்லியன் கணக்கான மக்கள்  ஊட் டச்சத்துக்காக பால் பொருள்களையே சார்ந்து வாழ்கின்ற நிலையில் அவர்க ளுடைய ஆரோக்கியம் சார்ந்து பாதிக்கப்படுகிறார்கள்.  சிறு தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு துறைகள் ஒருங்கிணைத்து போராட வேண்டும் என்று பால் உற் பத்தியாளர் சங்கங்களுக்கு அகில இந்திய விவசாயிகள் சங்கங்கள் அழைப்பு விடுத்திருக்கின்றன.