states

img

பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி-யால் குஜராத்தையும் மோடி அழித்துவிட்டார்!

அகமதாபாத், பிப். 28 - குஜராத் மாநிலத்திற்கும் பாஜக-வால் கேடுதான் ஏற்பட்டுள்ளது; இங்கி ருந்த தொழில்களை எல்லாம் பிரதமர் மோடி அழித்து விட்டார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். குஜராத் மாநிலம் துவாரகாவில் நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்று உரையாற்றினார். அப்போது இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்ப தாவது: அவர்கள் (பாஜக) சிபிஐ, அம லாக்கத்துறை, போலீஸ், குண்டர்கள் மற்றும் ஒவ்வொரு நாளும் புதிய ஆடை களை வைத்திருக்கிறார்கள். ஆனால், இவை எல்லாம் முக்கியமில்லை. உண்மைதான் முக்கியம் என்பதை குஜராத் நமக்குக் கற்றுக்கொடுத்தது. காந்திஜியைப் பாருங்கள். அவர் எப்போதாவது நல்ல ஆடைகளை வைத்திருந்தாரா, அமலாக்கத்துறை அல்லது சிபிஐ? இல்லை. ஏனென்றால் உண்மை எப்போதும் எளிமையானது. காங்கிரசுக்கு ஏற்படுத்திய பாதிப்பை விட, குஜராத் மக்களுக்கு பாஜக அதிக கேடு விளைவித்துள்ளது. பாஜக-வின் அரசியலால் குஜராத் பாதிக்கப்பட்டுள்ளது. வேலையில்லா திண்டாட்டம் இங்கு ஒரு முக்கியப் பிரச்ச னை. சிறு வணிகங்கள் ஒரு காலத்தில் குஜராத்தின் மிகப்பெரிய பலமாகவும், முதுகெலும்பாகவும் கருதப்பட்டன. ஆனால், பிரதமர் மோடி ஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கம் மற்றும் தொற்றுநோய் பாதிப்பின் போது உதவாதது போன்ற வற்றின் மூலம் அதை அழித்து விட்டார். இவற்றை மக்களுக்கு காங்கிரசார் எடுத்துச் சொல்ல வேண்டும். அதைச் சொல்வதில் நமக்கு என்ன குழப்பம்? வரவுள்ள குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக-வை வெளியேற்ற எனக்கு இங்கிருந்து திறமையான 5 தலைவர்கள் இருந்தால் போதும். குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளது என்பதை தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி பேசியுள்ளார்.