states

img

கார் சட்டமன்றத் தேர்தல் மஞ்சி தொகுதியில் சிபிஎம் சிறப்பு மாநாடு

கார் சட்டமன்றத் தேர்தல் மஞ்சி தொகுதியில் சிபிஎம் சிறப்பு மாநாடு

இளைஞர்கள், பெண்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கார் மாநிலத்தில் இந்த  ஆண்டு நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறு கிறது. இந்த தேர்தலுக்கான பணியை ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடது சாரிக் கட்சிகள் (சிபிஐ, சிபிஐ (எம்-எல்), விகாசீல் இன்ஸான் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய “இந்தியா” கூட்டணி தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில், பீகாரின் சரண் மாவட்டத்தின் மஞ்சி சட்டமன்றத் தொகுதியில் ஆகஸ்ட் 19ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல்  சிறப்பு மாநாடு (ஆலோசனைக் கூட்டம்) நடைபெற்றது. ஆயிரக்கணக்கா னோர் பங்கேற்ற இந்த மாநாட்டில் இளைஞர்கள், பெண்கள் என  அதிகமாக பங்கேற்றனர். சிபிஎம் மூத்த தலைவர் அருண் திவாரி சிறப்பு மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் டாக்டர் அசோக் தாவ்லே, மத்தியக்குழு உறுப்பினர்கள் லாலன் சவுத்ரி (மாநிலச் செயலாளர்), அவதேஷ் குமார், மஞ்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சத்யேந்திர யாதவ் (சிபிஎம்), மாவட்டச் செயலாளர் பதேஷ்வர் குஷ்வாஹா, மாநில செயற்குழு உறுப்பினர்கள் அஹ்மத் அலி, அருண் குமார் ஆகியோர் உரையாற்றினர். நாடு மற்றும் பீகார் மாநிலம் எதிர்கொண்டு வரும் கடுமையான அரசியல் நெருக்கடி குறித்து பேச்சாளர்கள் விரிவாக எடுத்து ரைத்தனர். அதே போல பீகாரில் அர சியலமைப்புக்கு எதிராக மேற் கொள்ளப்பட்ட வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) மற்றும் தேர்தல் ஆணையம் -  பாஜக கூட்டணியின் ஊழல் நிறைந்த வாக்குத் திருட்டு ஆகி யவை பற்றியும் சிறப்பு முக்கி யத்துவத்துடன் பேச்சாளர்கள் எடுத்துரைத்தனர்.  சிபிஎம் பீகார் மாநிலக் குழு தீர்மானித்த 4 முன்னுரிமைத் தொகுதிகளான மதிகானி, பிப்ரா, விபூதிப்பூர், மஞ்சி உள்ளிட்ட 4 தொகுதிகளிலும் ஆலோசனை கூட்டம் நடைபெற்று முடிந்து விட்டது. அடுத்து தேர்தல் அறிக்கை தொடர்பான மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என செய்தி கள் வெளியாகியுள்ளன.