states

img

கார்ப்பரேட்டுகளிடம் பாஜக ஓராண்டில் பெற்ற நன்கொடை ரூ.720 கோடி!

புதுதில்லி, ஏப்.6- கார்ப்பரேட் மற்றும் வணிக நிறுவ னங்கள் 2019-20 நிதியாண்டில் தேசிய கட்சிகளுக்கு ரூ. 921 கோடியே 95 லட் சத்தை நன்கொடையாக வழங்கியுள்ள நிலையில், இதில் பாஜக மட்டும் அதிகபட்ச மாக ரூ. 720 கோடியே 40 லட்சத்து 70 ஆயி ரத்தை நன்கொடையாகப் பெற்றுள்ளது. தன்னார்வத் தொண்டு நிறுவனமான ஜனநாயக சீர் திருத்தங்களுக்கான சங்கம் (Association for Democratic Reforms - ADR) வெளியிட்ட ஆய்வில் இது தெரியவந்துள் ளது.  ஒரு நிதியாண்டில் 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நன்கொடை அளித்த நன்கொடையாளர்கள் குறித்து, தேசியக் கட்சிகளான பாஜக (BJP), காங்கிரஸ் (INC), தேசியவாத காங்கிரஸ் (NCP), திரிணாமுல் காங்கிரஸ் (AITC) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி (CPM) ஆகிய ஐந்து கட்சிகள், இந்திய தேர்தல் ஆணையத்திடம் அளித்த விவரங்களின் அடிப்படையில், ஏடிஆர் தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஐந்து தேசியக் கட்சிகளில், 2019-20 நிதி யாண்டில் 2 ஆயிரத்து 25 கார்ப்பரேட் நன்கொடையாளர்களி டமிருந்து அதிகபட்சமாக ரூ. 720 கோடியே 40 லட்சத்து 70 ஆயி ரம் அளவிற்கான நன்கொடைகளை பாஜக பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி 154 நன்கொடை யாளர்களிடமிருந்து மொத்தம் ரூ. 133 கோடியையும், தேசிய வாத காங்கிரஸ் கட்சி 36 பெருநிறுவன நன்கொடையாளர்களி டமிருந்து ரூ. 57 கோடியையும் நன்கொடையாகப் பெற்றுள் ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2019-20 ஆம் ஆண்டில் கார்ப்பரேட்டுகளிடமிருந்து நன்கொடை எதுவும் பெற வில்லை. 2012-13 மற்றும் 2019-20க்கு இடையில், கார்ப்பரேட் மற்றும் வணிக நிறுவனங்களிடமிருந்து தேசிய கட்சிகளுக்கு நன்கொடைகள் 1,024 சதவிகிதம்- அதாவது 10 மடங்கு அதி கரித்துள்ளது.