states

img

உத்தரகண்டில் சிபிஎம் தேர்தல் பிரச்சாரம்

புதுதில்லி, பிப்.13- கடும் குளிர் வாட்டியெடுக்கும் உத்தர கண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் பிரச்சாரத்தை துவக்கியுள்ளது. 2,400 அடி உயரத்தில் உள்ள தாரலி தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் கூவர் ராமுக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான மக்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தா மல் திரண்டனர். குனி கிராமத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் சிபிஎம் மத்திய குழு உறுப் பினர் விஜு கிருஷ்ணன் உரையாற்றினார். டேராடூனில் உள்ள சஹாஸ்பூர் தொகுதி சிபிஎம் வேட்பாளர் கமாருதீனின் பிரச்சாரக் கூட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். விஜூ கிருஷ்ணன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க இணைச் செயலாளர் விக்ரம் சிங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ராஜேந்திரசிங் நேகி ஆகியோர் பேசினர். உத்தரகண்ட் மாநிலத்தில் இடதுசாரி முன்னணி 10 இடங்களில் போட்டியிடுகிறது. சிபிஎம் மற்றும் சிபிஐ தலா நான்கு இடங்களிலும், சிபிஐ (எம்எல்) இரண்டு இடங்களிலும் போட்டியிடுகின்றன. கேதார்நாத், தாரலி, சஹாஸ்பூர் மற்றும் ராணிப்பூர் ஆகிய இடங்களில் சிபிஐ (எம்) போட்டியிடுகிறது. விவசாயிகள் போராட்ட வெற்றியின் உற்சாகம் உத்தரகண்டில் தெளி வாகத் தெரிகிறது என விஜு கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.