states

img

இந்துத்துவா கும்பலால் கொல்லப்பட்ட சுலைமான் குடும்பத்தினருக்கு சிபிஎம் ஆறுதல்

இந்துத்துவா கும்பலால் கொல்லப்பட்ட சுலைமான் குடும்பத்தினருக்கு சிபிஎம் ஆறுதல்

பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிராவின் ஜல்காவ் மாவட்டத்தில் இந்துத்துவா கும்பல் அரங்கேற்றிய  தாக்குதலில் 21 வயதுமிக்க இளைஞன்  சுலைமான் கான் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகாராஷ்டிரா மாநில செயற்குழு உறுப்பினர்  சுனில் மாலுசாரே தலைமையிலான சிபிஎம் குழு சுலைமான் கானின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியது. மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக  கடும் நடவடிக்கை மற்றும் நிவாரணம் வழங்கக்கோரி  ஜல்காவ் மாவட்ட நிர்வாகத்திடம் சிபிஎம் குழு மனு சமர்ப்பித்தது.